செஃப்லீரா ரோஸ்ட்ரேட்டா (Wt.) Harms ரகம். ரோஸ்ட்ரேட்டா - ஆரல்லியேசி

இணையான பெயர் : ஹொப்ட்டலியுரம் ரோஸ்ட்ரேட்டம் (Wt.) Bedd.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரம், 8-12 மீ. உயரம் வரை வளரக்கூடியது, சிலசமயங்களில் பிற மரங்களின் மேல் அல்லது பாறைகளின் மேல் வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் கைவடிவகூட்டிலைகள், மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை, நுனிக்கிளையில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாகமைந்தவை; கூட்டிலையின் காம்பு பல்வினேட்; மத்திய முதற்காம்பு 10-20 செ.மீ. நீளமுடையது, இலையடிச்செதில் இலையின் காம்போடு ஒட்டியவாறு காணப்படுபவை; சிற்றிலையின் காம்பு 0.5-2.5 செ.மீ. நீளமுடையது, புதியதாய் தோன்றும் இலைகளில் துரு போன்ற சிறு உரோமங்கள் கொண்டவை; ஒர் கூட்டிலை 7-11 சிற்றிலைகளுடையது, சிற்றிலையின் அலகு 5.12 X 3-8 செ.மீ. நீள்சதுர-ஈட்டி வடிவானது, அலகின் நுனி கூரியது, அலகின் தளம் வட்டமானது புதியதாய் தோன்றும் இலைகளில் துருப்போன்ற உரோமங்களுடையது, முற்றிய இலைகள் உரோமங்களற்றது, கோரியேசியஸ்; இரண்டாம் நிலை நரம்புகள் 8-10 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் போன்றது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தண்டின் நுனியில் காணப்படுபவை; அம்பல் 2-2.5 செ.மீ. குறுக்களவுடையது ரெசீம் போல் அமைந்தது.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்); விதைகள் தட்டையானது

வாழியல்வு :

மிதமான உயரமுடைய (சப்கேனோப்பி) இம்மரங்கள் மிக உயரமான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில் காணப்படுகின்றன மற்றும் மிதமான உயரமுடைய மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளின் விளிம்புகளிலும் காணப்படுகின்றன, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 800 மற்றும் 2400 மீ. கிடைப்பட்ட மலைகளில் இருக்கின்றன.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுகின்றன - குறிப்பாக தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி (குடகுக்கும் சிமோகாவிற்கும் இடைப்பட்ட காடுகளில் தென்படுகின்றன).

சான்று ஏடு :

Engler & Prantl, Naturl. Pflanzenfam. 3 (8): 38. 1894; Gamble, Fl. Madras 1: 569. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 207. 2004.

Top of the Page