ஸ்கிளிரோபைரம் பெண்டான்ரம் (Denn.) Mabberley - சாண்டேலேசி

இணையான பெயர் : ஸ்கிளிரோபைரம் வாளிச்சீயானம் Arn.

Vernacular names : மலையாளப் பெயர்: இருமுள்ளிகன்னடப் பெயர்: பெண்டூகா, நாய்க்குளி

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறிய மரம் 7 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் நடுத்தண்டின் தளப்பகுதியில் முட்களுடையது; மரத்தின் பட்டை வழுவழுப்பானது, சாம்பல் நிறமானது-வெள்ளை நிறமானது; உள்பட்டை மஞ்சள் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் பச்சை நிறமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது, இலைக்கோணங்களில் முட்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலைக்காம்பு 0.4-0.8 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 8.5-17.5 x 4-7.5, நீள்வட்ட வடிவானது முதல் நீள்வட்டம்-நீள்சதுர வடிவானது அல்லது முட்டை வடிவானது, அலகின் நுனி கூரியதுடன் அதன் முனை மழுங்கியது அல்லது மெட்டையானது, அலகின் தளம் வட்டமானது, அலகின் விளிம்பு முழுமையானது, கோரியேசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பிற்கு சமமானது அல்லது அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 3-5 ஜோடிகள், நுனி நோக்கி வளைந்தவை, தளத்திலுள்ள ஒர் ஜோடி நரம்புகள் எதிராகமைந்தவை; மூன்றாம் நிலை நரம்புகள் மெல்லியவை, வலைப்பின்னல்-பெர்க்கரண்ட் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படுபவை, ஸ்பைக் வகை மஞ்சரி; மலர்கள் பாலிகேமஸ், சிவப்பு நிறமானது, காம்பற்றது.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), பைரிபார்ம், 3 செ.மீ. நீளமானது, சிவப்பு நிறமானது; ஒர் விதையுடையது.

வாழியல்வு :

பசுமைமாறாக்காடுகளின் விளிம்புகள் முதல் பகுதி_பசுமைமாறாக்காடுகளில் காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 600-1600 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

திபகற்ப இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு தொடர்ச்சி மலைகளில்-தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி பகுதிகளில் காணப்படுபவை.

சான்று ஏடு :

Mabb., Taxon 26: 533. 1977; Gamble, Fl. Madras 2: 1262. 1993 (re.ed.); Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6: 406. 2004; Saldanha, Fl. Karnataka 2: 74. 1996; Almeida, Fl. Maharashtra 4:276. 2003.

Top of the Page