ஸ்டீரியோஸ்பர்ம் கோலைஸ் Mabb. - பிக்னோனியேசி

இணையான பெயர் : ஸ்டீரியோஸ்பர்ம் பொர்சனேட்டம் (Hassk.) Chatterj.; பிக்னோனியா கோலைஸ் Buch.-Ham. ex Dillw.; ஸ்டீரியோஸ்பர்ம் டெட்ராகோணம் DC.

தமிழ் பெயர் : அம்பூ, அம்புவாகினிம் குறள், பாதிரி பொன்பாதிரி, பூம்பாதிரி, வெள்ளை பாதிரி, வெள்ள பாதிரி.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய இலையுதிர் மரம், தாங்கு வேர் (பட்ரஸ்டு), 25 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை நீள்வாக்கில் பிளவுகளுடையது, அரக்கு நிறமானது; உள்பட்டை கிரீம்.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது, லெண்டிசெல் கொண்டது.
இலைகள் : இலைகள் கூட்டிலைகள், ஒற்றைபடை சிறகுவடிவக்கூட்டிலைகள், 60 செ.மீ. நீளமானது, கூட்டிலைகள் எதிரடுக்கமானது, குறுக்குமறுக்கமானவை; மத்தியகாம்பு (ராக்கிஸ்) 6-16.5 செ.மீ. நீளமானது, கேனாலிகுலேட், உரோமங்களுடையது; ஒர் கூட்டிலை 3-5 ஜோடி சிற்றிலைகளுடையது, சிற்றிலைகள் எதிரானது மற்றும் நுனியில் ஒற்றை சிற்றிலையுடையது; சிற்றிலைக்காம்பு 0.8-1.5 செ.மீ. நீளமானது, கேனாலிகுலேட்; சிற்றிலையின் அலகு 5-15 X 2.5-7.5 செ.மீ., நீள்வட்டமானது, சிற்றிலையின் அலகின் நுனி வால் போன்றது. (வால் 1.5-4 செ.மீ. நீளமானது), அலகின் தளம் ஆப்பு வடிவானது முதல் சமமற்றது, சிற்றிலையின் விளிம்பு முழுமையானது, சார்ட்டேசியஸ், கீழ்பரப்பு உரோமங்களற்றது; மையநரம்பு அலகின் மேற்பரப்பிற்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 8-10 ஜோடிகளுடையது; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தண்டின் நுனியில் காணப்படுபவை, மலர்கள் அரக்கு கலந்த பர்புள் நிறமானது, அல்லி இதழ்கள் மென்மையானவை.
கனி / விதை : வெடிக்கனி (கேப்சூல்), 4-கோணங்களுடையது, திருகியது, 40 செ.மீ. நீளமுடையது; விதைகள் எண்ணற்றவை, சிறகுடையது.

வாழியல்வு :

பரவலாக அதிக மழை பெறும் இலையுதிர்காடுகளில் மற்றும் ஆங்காங்கே பசுமைமாறாக்காடுகளின் மரங்கள் அடர்த்தியற்ற இடத்திலும் அல்லது பசுமைமாறாக்காடுகளின் விளிம்புகளில் காணப்படுபவை; கடல் மட்டத்திலிருந்து 1200 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

இந்தியா, மியான்மார், ஸ்ரீலங்கா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் - தெற்கு, மத்திய மற்றும் தென்மஹாராஷ்ட்ரா சாயாத்திரிகளில் காணப்படுபவை.

சான்று ஏடு :

Taxon 27: 553. 1979; Gamble, Fl. Madras 2: 998. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 335. 2004; Keshava Murthy and Yoganarasimhan, Fl. Coorg (Kodagu) 322. 1990.

Top of the Page