சிம்பளாக்காஸ் பெண்டுலா Wt. - சிம்பளாக்கேசி

இணையான பெயர் : சிம்பளாக்காஸ் செசைலிஸ் Cl.

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறிய மரம் 10 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலைக்காம்பு 1-1.5 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 5.5-9.5 x 2.5-4 செ.மீ., நீள்வட்ட வடிவானது முதல் தலைகீழ் முட்டை வடிவானது, அலகின் நுனி கூரியது, அலகின் தளம் ஆப்பு வடிவானது, அலகின் விளிம்பு முழுமையானது, உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 8 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் தனித்தவை அல்லது 3 மலர்கள் தொகுப்பாகமைந்தவை, மஞ்சரிகாம்புடையது, இலைக்கோணங்களில் காணப்படுபவை அல்லது பக்கவாட்டில் அமைந்தவை, தெங்கியவை; மலர்காம்பு 0.2 செ.மீ. நீளமானது.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), நூற்கண்டு போன்ற வடிவமானது, 1.5 செ.மீ. நீளமானது.

வாழியல்வு :

மிக உயரமான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1500-2200 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா; மேற்கு தொடர்ச்சி மலைகளில்-தெற்கு சயாத்திரி பகுதிகளில் காணப்படுபவை.

சான்று ஏடு :

White, Ic. t. 1237. 1848; Gamble, Fl. Madras 2: 784. 1993 (re.ed.); Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6: 274. 2004.

Top of the Page