சைஜீஜியம் ஹார்ட்நரி Thw. - மிர்ட்டேசி

இணையான பெயர் : யுஜினியா ஹார்ட்நரி (Thw.) Bedd.

Vernacular names : தமிழ்ப் பெயர்: நிர்-நாவல்மலையாளப் பெயர்: நிர்-நாவல், கரிஞ்ஜாரா, கரிஞ்ஜ்வல், காட்டாயிரி, காட்டுஞ்ஜ்வல், நீர்ஞ்ஜ்வல்கன்னடப் பெயர்: பிலிடிருபா

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மிகப்பெரிய மரம் தாங்கு_வேர்களுடையவை (பட்ரஸ்டு), 60 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வெள்ளை நிறமானது அல்லது வெளிறிய சாம்பல் நிறமானது, பொரும்பாலும் ஒழுங்கற்ற செதில்களாக உதிருபவை; உள்பட்டை ப்ரவுன் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது முதல் சிறிது நான்கு கோணங்களுடையது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கானவை; இலைக்காம்பு 0.4-1.3 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 5-10 X 2.5-4 செ.மீ., நீள்வட்ட வடிவானது (இளம்பருவத்தில் கோட்டு வடிவானது பிறகு குறுகிய நீள்சதுர வடிவானது), அலகின் நுனி வால் போன்றது அல்லது வால்-அதிக்கூரியது, (முனை 0.8-1.8 செ.மீ. நீளமானது), அலகின் தளம் கூரியது அல்லது அட்டனுவேட், அலகின் விளிம்பு முழுமையானது, சார்ட்டேசியஸ், உரோமங்களற்றது, ஒளிபுகும் சுரப்பி புள்ளிகளுடையது, இளம்பருவத்தில் இலைகள் பிங்க் நிறமானது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; விளிம்பு நரம்பு (இண்ட்ராமார்ஜினல் நரம்பு) கொண்டது; இரண்டாம் நிலை நரம்புகள் நெருக்கமான இணையானவை; மூன்றாம் நிலை நரம்புகள் மெல்லியது, ஆட்மீடியல்லி ராமிபைடு.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி கோரியம்போஸ் சைம் வகை மஞ்சரி, தண்டின் நுனியில் காணப்படும்; மலர்கள் வெள்ளை நிறமானது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி) கோளவடிவானது, நிரந்தரமான புல்லி இதழ்களுடையவை, பர்புள்; ஒரு விதையுள்ள கனி.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரங்கள் முதல் எமர்ஜெண்ட் மரங்களாக (காடுகளின் மேல்மட்ட அடுக்கை விட மிக உயர்ந்த மரமாக), பசுமைமாறாக்காடுகளில் குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1400 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

தொடர்ச்சி மலைகளில் மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில் - தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி மலைகளில் காணப்படுபவை.

தற்போதைய நிலை :

உறுபடத்தக்க நிலையில் (வல்நர்புள்) உள்ளவை (ஐ.யூ.சி. எண்., 2000).

சான்று ஏடு :

Enum. Pl. Zeyl. 117. 1859; Gamble, Fl. Madras 1: 479.1997 (re.ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 177. 2004; Saldanha, Fl. Karnataka 2: 28. 1996; Cook, Fl. Bombay 1: 492. 1903.

Top of the Page