சைஜீஜியம் கேமிஸ்பெரிக்க்ம் (Wt.) Alston - மிர்ட்டேசி

இணையான பெயர் : யுஜினியா கேமிஸ்பெரிக்காWt.; ஜாம்போசா கேமிஸ்பெரிக்கா Walp.

Vernacular names : தமிழ்ப் பெயர்: வெள்ளை நாவல், வெள்ளை நாயரல்மலையாளப் பெயர்: பேய்ஞ்வல், தொல்ஞ்வல், வெள்ளஞ்ரா, வெண்ஞ்ரா, வெண்ஞ்யாராகன்னடப் பெயர்: பென்நெரலெ, பண்நெரலெ

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 20 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வழவழப்பானது, சாம்பல்-ப்ரவுன் நிறமானது, உள்பட்டை கிரீம் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கானவை; இலைக்காம்பு 0.5-1.5 செ.மீ. நீளமானது, இலைக்காம்பு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 7.5-19 X 2.5-8 செ.மீ., நீள்வட்ட வடிவானது, தலைகீழ் ஈட்டி வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது மற்றும் திருகியது அல்லது கூரியது அதன் முனை மழுங்கியது, அலகின் தளம் கூரியது முதல் ஆப்பு வடிவானது, அலகின் விளிம்பு முழுமையானது, ஒளிபுகும் சுரப்பி புள்ளிகளுடையது, கோரியேசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; விளிம்பு நரம்பு (இண்ட்ராமார்ஜினல் நரம்பு) கொண்டது (சிலசமயங்களில் கண்களுக்கு புலப்படாது); மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட சிறிது பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 8-12 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் கிடைமட்டமான வலைப்பின்னல்-பெர்க்கரண்ட் அமைப்பு கொண்டது.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் பெரியவை, வெள்ளை நிறமானது, மஞ்சரி தண்டின் நுனியில் காணப்படும் சைம் வகை; மலர்காம்பு 0.5 செ.மீ. நீளமானது; புல்லி குழாய் தலைகீழ் கூம்பு வடிவானது.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), 2-2.5 செ.மீ. குறுக்களவுடையது, கோள வடிவமானது, பர்புள் நிறமானது, நிரந்தரமான புல்லி இதழ்களுடையவை.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) முதல் மிதமான உயரமுடைய (சப்கேனோப்பி) மரமாக பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1400 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

தென்இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில் - தெற்கு, மத்திய மற்றும் மஹாராஷ்ட்ரா சயாத்திரியிலும் காணப்படுபவை.

சான்று ஏடு :

Trimen, Handb. Fl. Ceylon 6 (Suppl.): 115. 1931; Gamble, Fl. Madras 1: 474.1997 (re.ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 177. 2004; Saldanha, Fl. Karnataka 2: 28. 1996; Cook, Fl. Bombay 1: 488. 1903; Almeida, Fl. Maharashtra 2:271. 1998

Top of the Page