டூனா சிலியேட்டா Roem. - மீலியேசி

இணையான பெயர் : செட்ரெல்லா டூனா Roxb. ex Rottl. & Willd.

Vernacular names : தமிழ்ப் பெயர்: சந்தனவேம்பு, டூனுமரம்மலையாளப் பெயர்: அகில், அரனமரம், அரொமா, சந்தானவேப்பு, சுவானஅகில், தேவதமரம், இக்கன, மதுகிரி வேம்பு, பட்டுக்கரனா, துனம், வெடிவேம்பு, வேம்புகன்னடப் பெயர்: கெண்ட கரிக்கே, கேம்பு கெண்டகிரி

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : இலையுதிர் மரம் 28 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சிவப்பு ப்ரவுன் நிறமானது, முதிரும் போது பெரிய செதில்களாக உதிருபவை; உள்பட்டை பிங்க் நிறமானது மற்றும் வெள்ளை நிறமான கோடுகளுடையது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது, உரோமங்களற்றது.
இலைகள் : கூட்டிலை, இரட்டைபடை_சிறகுவடிவக்கூட்டிலை (பேரிப்பின்னேட்), 23-90 செ.மீ. நீளமானது, சிறுகிளைகளின் நுனியில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாக காணப்படும்; மத்தியகாம்பு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, பல்வினேட், 60 செ.மீ. அல்லது அதைவிட நீளமானது, உரோமங்களற்றது; சிற்றிலைக்காம்பு 0.7-2.0 செ.மீ. நீளமானது; சிற்றிலைகள் 6-15 ஜோடிகள், மாற்றுஅடுக்கமானவை, கிட்டத்தட்ட எதிரடுக்கமானவை அல்லது எதிரடுக்கமானவை, 5-15 X 2-6 செ.மீ., ஈட்டி வடிவானது முதல் குறுகிய முட்டை வடிவானது, அலகின் நுனி வால்-அதிக்கூரியது மற்றும் திருகியது, அலகின் தளம் சமமற்றது, அலகின் விளிம்பு முழுமையானது, இளம்பருவத்தில் சிலசமயங்களில் பிறை போன்ற பற்களுடையது, சார்ட்டேசியஸ் முதல் சப்கோரியேசியஸ், உரோமங்களற்றது, அலகின் மேற்பரப்பு பளபளப்பானது, கீழ்பரப்பு வெளிறிய நிறமானது; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பிற்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 12-16 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தண்டின் நுனியில் காணப்படும் பேனிக்கிள், தெங்கியவை; மலர்கள் வெள்ளை நிறமானது.
கனி / விதை : வெடிகனி (கேப்சியூல்), நீள்வட்ட வடிவானது, 5-அறைகளுடையது, 2 செ.மீ. நீளமானது, ஆங்காங்கே வெள்ளை நிறமானது; விதைகள் எண்ணற்றவை, தாள் போன்ற சிறகுடையது.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக மரங்கள் அடர்த்தியற்ற பசுமைமாறாக்காடுகள், பகுதி_பசுமைமாறாக்காடுகள் முதல் மழை அதிகம் பெறும் இலையுதிர்காடுகளிலும் காணப்படும், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1200 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில் - முழுவதும் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Syn. Hesper. 139. 1846; Gamble, Fl. Madras 1: 186.1997 (re.ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 91. 2004; Saldanha, Fl. Karnataka 2: 236. 1996; Cook, Fl. Bombay 1: 217. 1903; Almeida Fl. Maharashtra 1: 229. 1996

Top of the Page