வெட்டீரியா மேக்ரோகார்ப்பா Gupta - டிப்டிரோகார்ப்பேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரம் 30 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை பழுப்பு நிறம், வழுவழுப்பானது.
சாறு : ரெசினஸ் சாறு.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் அமைப்பு கொண்டது; இலைக்காம்பு 2.5-6 செ.மீ., நுனியில் தடித்தது, நுண்ணிய உரோமங்களுடையவை; இலை அலகு 13-30 X 6.5 -16 (40x20) செ.மீ., நீள்வட்டம்–நீள்சதுர வடிவமுடையது அல்லது நீள்சதுர-ஈட்டி, அலகின் நுனி அதிக்கூரியது அல்லது மழுங்கியது, அலகின் தளம் வட்டமானது அல்லது சிறிய இதய வடிவானது (சப்கார்டேட்), இலை விளிம்பு சமதளமானது, கோரியேசியஸ், உரோமங்களற்றது அல்லது ஆங்காங்கே தளப்பகுதியில் மற்றும் அடிபரப்பில் மையநரம்பு நட்சத்திர வடிவ உரோமங்களுடையது; மையநரம்பு மேற்பரப்பில் உயர்ந்தது; இரண்டாம் நிலை நரம்புகள் 19 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் சாய்ந்தவாறு பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படும், பேனிக்கிள்ஸ்; அடர்ந்த நட்சத்திர வடிவ உரோமங்களுடையது, மலர்கள் 3.3 செ.மீ., குறுக்களவுடையது, மலர்க்காம்பு 0.5 செ.மீ. நீளமானது.
கனி / விதை : வெடிகனி (கேப்சூல்), பெரியது, 11 X 6 செ.மீ., புல்லி இதழ்கள் நிரந்தரமானவை, வளைந்தது; ஒரு விதை கொண்டது.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 900 மீ. உயரம் வரையான மலைகளிலுள்ள மழை அதிகம் பெறும் பசுமைமாறாக்காடுகளில் காணப்படுகிறது.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படுகிறது- முத்திக்குளம், அட்டபாடி பகுதியில் (பாலக்காடு) காணப்படுகிறது.

சான்று ஏடு :

Ind. For. 55: 231. 2. 1929; Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 45. 2004.

Top of the Page