வெர்னோனியா அர்போரியா Buch.-Ham. - ஆஸ்டர்யேசி

இணையான பெயர் : வெர்னோனியா மோனோசிஸ் Benth. ex Clarke

தமிழ் பெயர் : கரணா, சாடகை, சுத்தை

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : நடுத்தர உயரமுடைய மரங்கள், 15 மீ. வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை அரக்கு ( ப்ரவுன்) நிறமானது; உள்பட்டை கருமை நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, நுனிக்கிளையில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாகமைந்தவை; இலைக்காம்பு 0.6-2.6 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வட்டம் போன்றது, உரோமங்களுடையது; இலை அலகு 8.5-19 X 4-11 செ.மீ., தலைகீழ் முட்டை வடிவம் அல்லது அகன்ற தலைகீழ் முட்டை வடிவம், அலகின் நுனி கூரியது அல்லது சிறிய அதிக்கூரிய நுனியுடையது, அலகின் தளம் ஆப்பு வடிவானது முதல் கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது அல்லது பெரிய மற்றும் சிறிய ரம்ப பற்களுடையது; சார்ட்டேசியஸ், அலகின் பின்புறம் உரோமங்களுடையது; அலகின் மேற்பகுதியுலுள்ள மையநரம்பு உரோமங்களுடையது; இரண்டாம் நிலை நரம்புகள் 10-15 ஜோடிகள், மடிப்பு வளையம் போன்று விளிம்பில் ஒன்றோடொன்று இணைந்தவை; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல்-பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : சிரமஞ்சரி பெரியது, தண்டின் நுனியில் காணப்படும் பேனிக்கிள்டு சைம், பர்புள் நிறமானது.
கனி / விதை : சிற்றுலர்கனி (அக்கீன்), வரித்தழும்புகளுடையவை; விதையுடையது, உரோமங்களுடையது.

வாழியல்வு :

அரிதானது, பசுமைமாறாக்காடுகளின் விளிம்புகளில் காணப்படுபவை, கடல் மட்டத்திலிருந்து 1900 மீ. வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

இந்தோமலேசியா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் - தெற்கு மற்றும் மத்திய சயாத்திரிகளில் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Trans. Linn. Soc. London 14: 218.1824; Gamble, Fl. Madras 2: 672.1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 257. 2004; Keshava Murthy and Yoganarasimhan, Fl. Coorg (Kodagu) 256. 1990; Cook, Fl. Bombay 2: 12. 1902.

Top of the Page