வெர்னோனியா ட்ரவன்கோரிக்கா J. Hk. - ஆஸ்டர்யேசி

இணையான பெயர் : வெர்னோனியா வால்க்கமரியேஃபோலியா Bedd.

தமிழ் பெயர் : தேன்பூ

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறியமரம், 8 மீ. வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை :
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது மற்றும் இலை உதிர்ந்த தழும்புகளுடையது, சிறு உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போல் அமைந்தவை, நுனிக்கிளையில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாகமைந்தவை; இலைக்காம்பு 0.6-1.2 செ.மீ. நீளமானது, பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 4-15 X 2.3-7.5 செ.மீ. தலைகீழ் முட்டை வடிவானது, அலகின் நுனி மழுங்கியவை அல்லது வட்டமானது, அலகின் தளம் ஆப்பு வடிவானது, அலகின் விளிம்பு அலைப்போன்றது, கோரியேசியஸ், கீழ்பரப்பு உரோமங்களற்றது, மையநரம்பு அலகின் மேற்பரப்புக்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 5-8 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல்-பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : சிரமஞ்சரி, தண்டின் நுனியில் காணப்படும் பேனிக்கிள், பர்புள் நிறமானது.
கனி / விதை : சிற்றுலர்கனி (அக்கீன்), வரித்தழும்புகளுடையது மற்றும் மஞ்சள் நிறமுடைய சுரப்பிகளுடையது; 1-விதையுடையது.

வாழியல்வு :

பசுமைமாறாக்காடுகளின் விளிம்புகளில் காணப்படுபவை, கடல் மட்டத்திலிருந்து 1000-1700 மீ. வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுகின்றன - அகஸ்த்திய மலை மற்றும் வருசநாடு மலைகளில் (தெற்கு சயாத்திரி) காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Fl. Brit. India 3: 240.1881; Gamble, Fl. Madras 2: 673. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 257. 2004.

Top of the Page