வைபர்ணம் ஹிபேன்தம் Wt. & Arn. - கேப்ரிபோலியேசி

:

தமிழ் பெயர் : பாடாக, கடம்பு

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறிய மரம் 6 மீ. உயரம் வரை வளரக்கூடியது
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரிலையடுக்கம், குறுக்குமறுக்கமானவை; இலையடிச்செதில் உதிரக்கூடியது; இலைக்காம்பு 1.5 செ.மீ. நீளமானது, கேனாலிகுலேட்; இலை அலகு 4.5 - 7 X 2.4 - 4 செ.மீ., நீள்வட்டம் முதல் முட்டை வடிவம், அலகின் நுனி கூரியது, அலகின் தளம் கூரியது முதல் சிறிதளவு
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி கூட்டு அம்பல் மற்றும் கோரியம்ப்.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), முட்டை வடிவம்; ஒரு விதை கொண்டது.

வாழியல்வு :

குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 2000 முதல் 2400 மீ. உயரம் வரையான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளின் விளிம்பு பகுதியில் காணப்படும்.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுகிறது - நீலகிரி மற்றும் பழனி பகுதியில் உள்ள பசுமைமாறாக்காடுகளில் காணப்படும்.

சான்று ஏடு :

Wight and Arnott, Prodr. 388. 1834; Gamble, Fl. Madras 1: 576. 1997 (re. ed).

Top of the Page