ஜான்ந்தாசைலம் ரெட்சா (Roxb.) DC - ரூட்டேசி

இணையான பெயர் : பொக்ரா ரெட்சா Roxb.; ஜான்ந்தாசைலம் புத்ரங்கா (Roxb.) DC

Vernacular names : மலையாளப் பெயர்: கொதுமுறிக்கு, முள்ளிலம், முள்ளிலவுகன்னடப் பெயர்: ஜுமினா, காடுமெனசு, ஆரிம்பலாஆங்கிலப் பெயர்: இண்டியன் ப்ரிக்ளி ஆஸ்

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : இலையுதிர் மரங்கள் 12 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் நடுத்தண்டின் பெரிய கார்க் போன்ற எளிதில் உதிரக்கூடிய சிறியமுட்கள் (ப்ரிக்கிள்) கொண்டவை; மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, கார்க் போன்றது, மஞ்சள் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது, உரோமங்களற்றது, எளிதில் உதிரக்கூடிய சிறியமுட்கள் (ப்ரிக்கிள்) கொண்டவை.
இலைகள் : இலைகள் கூட்டிலை, ஒற்றைபடை_சிறகு வடிவக்கூட்டிலைகள், மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை, சிறுகிளைகளின் நுனியில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாக காணப்படும்; மத்தியகாம்பு (ராக்கிஸ்) குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; சிற்றிலைக்காம்பு 0.3 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; சிற்றிலைகள் 15-23, எதிரடுக்கமானவை, 6.5-11 X 3.5-4.5 செ.மீ., நீள்சதுர வடிவானது, நீள்வட்டம்-நீள்சதுர வடிவானது, அலகின் நுனி வால் போன்றது முதல் அதிக்கூரியது (முனை 3 செ.மீ. நீளமானது), அலகின் தளம் சமமற்றது, அலகின் விளிம்பு சிறிய பிறை போன்ற பற்களுடையது பிளவுகளில் சுரப்பிகளுடையது, கோரியேசியஸ், குறைந்தளவு ஒளிபுகும் சுரப்பி புள்ளிகளுடையது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 6-12 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் அட்மீடியல்லி ராமிபைடு முதல் அகன்ற வலைப்பின்னல் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி பேனிக்கிள் வகை மஞ்சரி, தண்டின் நுனியில் காணப்படும் அல்லது தண்டின் நுனியிலுள்ள இலைக்கோணங்களில் அமைந்தவை; மலர்கள் பாலிகேமஸ், பச்சை நிறமானது மஞ்சள் நிறமானது; ஆண் மலர்கள் மற்றும் பெண் மலர்கள் காம்பற்றது
கனி / விதை : பாலிக்கிள், கோள வடிவமானது, நீட்சியுடையது; ஒர் விதையுடையது, கோள வடிவமானது, வழுவழுப்பானது, நீல-கருப்பு நிறமானது

வாழியல்வு :

பசுமைமாறாக்காடுகளில் காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 500-1500 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில்-முழுவதும் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

DC, Prodr. 1: 728. 1824; Gamble, Fl. Madras 1: 150. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6: 84. 2004; Cook, Fl. Bombay 1: 178.1903; Saldanha, Fl. Karnataka 2: 226. 1996; Almeida, Fl. Maharashtra 1:213. 1996.

Top of the Page