அக்லையா சிம்பிலிசிஃபோலியா (Bedd.) Harms - மீலியேசி

இணையான பெயர் : பெடோமியா சிம்பிலிசிஃபோலியா Bedd.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள், 6 மீ. உயரம் வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல் கலந்த ப்ரவுன் நிறமானது, வழுவழுப்பானது; உள்பட்டை சிவப்பு கலந்த ப்ரவுன் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் நட்சத்திர வடிவ உரோமங்களுடையது.
சாறு : மிகக் குறைந்தளவு வெள்ளை நிறமான பால் சுரக்ககூடியது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலைக்காம்பு 1.3-4 செ.மீ. நீளமானது, காம்பின் இருமுனைகளும் உப்பியவை, நட்சத்திர வடிவ உரோமங்களுடையது; இலை அலகு 9.5-22.5 X 4.9-10.4 செ.மீ., நீள்வட்டம் முதல் தலைகீழ் முட்டை வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியதுடன் முனை மழுங்கியது, அலகின் தளம் மொட்டையானது அல்லது கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது, மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பிற்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 12-14 ஜோடிகள், அலகின் கீழ்பரப்பில் தெளிவானது; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல்-பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி பேனிக்கிள் வகை, இலையின் நீளத்தை விட குட்டையானது.
கனி / விதை : வெடிகனி (கேப்சூல்), நீள்சதுரம் அல்லது தலைகீழ் முட்டை வடிவானது, நுனி நீட்சியுடையது 2.5-4 செ.மீ. நீளமானது, அடர்த்தியாக துருப்போன்ற உரோமங்களுடையது.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, தாழ்ந்த மற்றும் மிதமான உயரமுடைய மலைகளிலுள்ள அதிக மழை பெறும் பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 200-1400 மீ. வரை உயரமான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

இந்தோமலேசியா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் - தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி (வயநாடு மற்றும் கூர்க் பகுதிகளில்) மலைகளில் காணப்படுகின்றன.

தற்போதைய நிலை :

பாதிக்கும் தருவாயில் (த்ரட்டண்டு) உள்ளவை (ஐ.யூ.சி.எண்., 2000).

சான்று ஏடு :

Engler and Prantl, Pflanzenf. ed. 2. 19b. 1: 146. 1940; Pannell, A taxonomic monograph of the Genus Aglaia Lour. (Meliaceae), 306. 1992; Gamble, Fl. Madras 1: 184.1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 88. 2004; Saldanha, Fl. Karnataka 2: 230. 1996.

Top of the Page