ஆக்ரோஸ்டாக்கிஸ் போர்னியன்சிஸ் Becc. - ஈபோர்பியேசி

இணையான பெயர் : அக்ரோஸ்டாக்கிஸ் மீபோல்டி Pax. & K. Hofm.

தமிழ் பெயர் : மஞ்சேரை, மணிக்குளிக்கி

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள், 15 மீ. உயரம் வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வழுவழுப்பானது, ப்ரவுன் கலந்த சாம்பல் நிறமானது; உள்பட்டை வெளிறிய ஆரஞ்சு நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் தடித்தது, இலைகள் மற்றும் இலையடிச்செதில் உதிருவதனால் ஏற்படும் தழும்புகளுடையது, உரோமங்களற்றது.
சாறு : தண்டின் நுனியில் காணப்படும் மொட்டு மஞ்சள் நிறமான பிசின் (ரெசின்) சுரக்க கூடியது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; சிறுகிளைகளின் நுனியில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாக காணப்படும்; இலையடிச்செதில் முட்டை வடிவானது, எளிதில் உதிரக்கூடியது; இலைக்காம்பு 1-2.5 செ.மீ. வரை நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ்; இலை அலகு 12-26 (-50) X 3-7.5 செ.மீ. நீண்ட தலைகீழ் ஈட்டி வடிவானது, அலகின் நுனி மழுங்கிய அதிக்கூரியது, அலகின் தளம் ஆப்பு மற்றும் டெக்கரண்ட் வடிவானது, அலகின் விளிம்பு முழுமையானது, கோரியேசியஸ், உலரும் போது ப்ரவுன் நிறமடைகிறது; மையநரம்பு தடித்தது, அலகின் இருபுறமும் அலகின் பரப்பைவிட மேலெழும்பியது; இரண்டாம் நிலை நரம்புகள் 12-18 ஜோடிகள், அலகின் மேற்பரப்பில் அலகின் பரப்பைவிட சற்று அழுந்தியவை; மூன்றாம் நிலை நரம்புகள் மெல்லியது மற்றும் நெருக்கமானது, நேரான பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரிகள் இலைக்கோணங்களில் காணப்படும் ஸ்பைக்; மலர்கள் ஓர்பாலானவை, ஈரகம் கொண்டவை; ஆண்மலர்கள் காம்பற்றவை, 3-5 மலர்கள் கூட்டமாக ஓர் மலரடிச்செதிலுடன் காணப்படும்; பெண்மலர்கள் தனித்து ஓர் மலரடிச்செதிலுடன் காணப்படும்.
கனி / விதை : வெடிகனி (கேப்சூல்), 3 அறைகளுடையது, 1 செ.மீ. குறுக்களவுடையது; ஒர் அறையில் 1 விதையுடையது.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, அதிகமான எண்ணிக்கையில், மிதமான உயரமுடைய அதிக மழை பெறும் பசுமைமாறாக்காடுகளில் குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 600-1500 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் பரவலாக தெற்கு சயாத்திரியிலும் மற்றும் அரிதாக மத்திய சயாத்திரியில் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Nelle For. Borneo 331. 1902; Gamble, Fl. Madras 2: 1318. 1993 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 408. 2004; Saldanha, Fl. Karnataka 2: 115. 1996.

Top of the Page