ஆர்ச்சிடொன்றான் கிளிப்போரியா (Jack) Nielson - ஃபேபேசி-மைமோசிஆய்டியா

இணையான பெயர் : இங்கா கிளிப்போரியா Jack; பித்திசெல்லொபியம் சப்கொரிசியம் Thw.

Vernacular names : தமிழ்ப் பெயர்: மலை-வாகை, மழவாகைமலையாளப் பெயர்: அத்தா பெரந்தா, மழவாகா

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய குத்துச்செடி முதல் சிறிய மரம் 10 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கோணங்களுடையது, துரு உரோமங்களுடையது.
இலைகள் : கூட்டிலை, இருமுறை கிளைத்த சிறகுவடிவக்கூட்டிலை (பைபின்னேட்), இரட்டைபடை_சிறகுவடிவக்கூட்டிலை (பேரிப்பின்னேட்), மாற்றுஅடுக்கமானவை, சுழல் போல் அமைந்தது; இலையடிச்செதில் எளிதில் உதிரக்கூடியது; மத்தியகாம்பு 5-16 செ.மீ. நீளமானது, பல்வினேட், வட்டவடிவ காம்பற்ற சுரப்பிகள் மேற்புறத்தில் உடையது, துரு உரோமங்களுடையது; பின்னே 3-12 ஜோடிகள், எதிரடுக்கமானவை, உரோமங்களுடையது; சிற்றிலைகள் எண்ணற்றவை, சிறியவை, காம்பற்றது, 0.6-0.9 X 0.2 செ.மீ., நீள்சதுர வடிவானது முதல் நீள்சதுர-ட்ரப்பிசாய்டு, அலகின் நுனி கூரியது மற்றும் மூயூக்கரனேட், அலகின் தளம் சமமற்றது, அலகின் விளிம்பு முழுமையானது மற்றும் மற்றும் பின்புறம் வளைந்து காணப்படும், கோரியேசியஸ், உரோமங்களுடையது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 4-6 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் கண்களுக்கு புலப்படாது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தலை வகை, சிறிய கூட்டமாக காணப்படுபவை; மலர்கள் காம்பற்றது, பச்சை-வெள்ளை நிறமானது, மகரந்தாள் வெள்ளை நிறமானது மற்றும் எண்ணற்றவை.
கனி / விதை : பாட் கனி (அவரைப்போன்றது), 7.5-10 செ.மீ. நீளமானது, கோரியேசியஸ், திருகியது; விதைகள் 4-12.

வாழியல்வு :

மிக உயரமான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளின் விளிம்புகளில் காணப்படுபவை, குறிப்பாக 1300-2200 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு_தொடர்ச்சி மலைகளில் - தெற்கு சயாத்திரி.

சான்று ஏடு :

Adansonia 19: 15. 1979; J. Econ. Tax. Bot. 17: 688.1993; Gamble, Fl. Madras 1: 434.1997 (re.ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 162. 2004.

Top of the Page