ப்ளாச்சியா டெனுடேட்டா Benth. - ஈபோர்பியேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, பொதுவாக வழுவழுப்பானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, லெண்டிசெல் உடையது, உரோமங்களற்றது.
சாறு : இலையின் வெட்டிய பகுதியில் மற்றும் தண்டின் உடைந்த பகுதியில் வெண்மை நிறமான திரவத்தை சுரக்ககூடியது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, அல்லது எதிரடுக்கம் போன்றவை, சுழல் போன்று அமைந்தவை; இலையடிச்செதில் எளிதில் உதிரக்கூடியது; இலைக்காம்பு 0.5-1.5 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 6-19 X 2.5-8 செ.மீ., உருவத்தில் மாறுபாடுகள் நிறைந்தது, குறுகிய நீள்வட்டம் முதல் முட்டை வடிவானது, அலகின் நுனியில் மொட்டையான முனையுடன் கூரியது முதல் அதிக்கூரியது, அலகின் தளம் சமமற்றது, அல்லது வட்டமானது முதல் கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது, சார்ட்டேசியஸ், கீழ்பரப்பு உரோமங்களற்றது; மையநரம்பு அலகின் மேற்பரப்பிற்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 5-8 ஜோடிகள், தளத்திலுள்ள ஓர் ஜோடி நரம்புகள் எதிரானவை மற்றும் குறுகிய கோணமுடையவை; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல்-பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் ஓர்பாலானவை, ஓரகம் கொண்டவை; ஆண்மலர்கள் தண்டின் நுனியில் மெல்லிய ரெசீம்; பெண்மலர்கள் குறைந்த எண்ணிக்கையில் ஆண் ரெசீம்களின் தளத்தில் காணப்படுகின்றன.
கனி / விதை : வெடிகனி (கேப்சூல்), நீள்வட்டமானவை அல்லது கோளவடிவானது, மூன்று பிளவுகளுள்ள அறைகளுடையது; விதைகள் மூன்று கொண்டது.

வாழியல்வு :

அதிக மற்றும் குறைவான மழை பெறும் பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து, 900 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுபவை - முக்கியமாக மத்திய சாயாத்திரி மலைகளில் மட்டும் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

J. Linn. Soc. Bot. 17: 226. 1880; Gamble, Fl. Madras 2: 1338. 1993 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 411. 2004; Saldanha, Fl. Karnataka 2: 120. 1996.

Top of the Page