பாம்பக்ஸ் சீபா L. - பாம்பாகேசி

இணையான பெயர் : பாம்பக்ஸ் மலபாரிக்கம் DC

தமிழ் பெயர் : இலவமரம், இலவுமரம், முள் இலவு, புளை, பூரணி, மலை இலவம்.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய இலையுதிர் மரம், தாங்கு வேர் (பட்ரஸ்டு) உடையது, 40 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, எளிதில் உதிரக்கூடிய முட்களுடையது (ப்ரிக்கிள்), சிறு செதில்களாக உதிரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : கிளைகள், நிலத்திற்கு கிடைமட்டமானது; சிறிய நுனிக்கிளைகள் கணுவில் நெருக்கமாக சுழலில் அமைந்தவை, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, எளிதில் உதிரக்கூடிய முட்களுடையது.
இலைகள் : இலைகள் கூட்டிலைகள், கைவடிவகூட்டிலைகள், நுனிக்கிளையில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாகமைந்தவை; இலையடிச்செதில் ஈட்டி வடிவானது, உதிரக்கூடியவை; இலையின் காம்பு 12-30 செ.மீ. நீளமானது; குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது; ஒர் கூட்டிலையில் 3-8 ஜோடி சிற்றிலைகளுடையது; சிற்றிலையின் அலகு (4-) 8-16 X (1.5-) 3-7 செ.மீ., நீள்வட்ட வடிவம் முதல் தலைகீழ் ஈட்டி வடிவானது, அலகின் நுனி கூரியது முதல் அதிக்கூரியது, அலகின் தளம் ஆப்பு முதல் கூரியது, அலகின் விளிம்பு முழுமையானது, கீழ்பரப்பு உரோமங்களற்றது, சார்ட்டேசியஸ்; மையநரம்பு அலகின் மேற்பரப்பைவிட மேலெழும்பியது; இரண்டாம் நிலை நரம்புகள் 14 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் போன்றது.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் தனித்தவை அல்லது ஒர் தொகுப்பானது, பொதுவாக இலைகளற்ற கிளைகளில் காணப்படுபவை, சிவப்பானது.
கனி / விதை : வெடிக்கனி (கேப்சூல்), தடித்தவை 5-அறைகளுடையது, வெள்ளை நிறமான அடர்த்தியான பஞ்­­­­­­சு கொண்டது; விதைகள் எண்ணற்றது.

வாழியல்வு :

எமர்ஜெண்ட் மரங்களாக (காடுகளின் மேல்மட்ட அடுக்கை விட மிக உயர்ந்த மரமாக), மரங்கள் அடர்த்தியற்ற பசுமைமாறாக்காடுகளில் காணப்படுபவை; குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1400 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

இந்தோமலேசியா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் - தெற்கு, மத்திய மற்றும் தென்மஹாராஷ்ட்ரா சாயாத்திரிகளில் காணப்படுபவை.

சான்று ஏடு :

Linnaeus, Sp. Pl. 511. 1753; Gamble, Fl. Madras 1: 99. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 55. 2004; Saldanha, Fl. Karnataka 1: 239. 1996; Keshava Murthy and Yoganarasimhan, Fl. Coorg (Kodagu) 73. 1990; Cook, Fl. Bombay 2. 120. 1902.

Top of the Page