சையாத்தியா நீல்கிரன்ஸ் Holttum - சையாத்தியேசி

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 8 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் நடுத்தண்டு சாம்பல்-ப்ரவுன் நிறமானது, இலைகள் உதிர்ந்ததால் உண்டாகும் தழும்புகளுடன் காணப்படுகின்றன.
இலைகள் : பனை வகைப் போன்று நடுத்தண்டு உச்சியில் இலைகளுடையது; இலைகள் இருமுறை கிளைத்த சிறகுவடிவக்கூட்டிலை (பைபின்னேட்), 200 செ.மீ. நீளமானது; ஸ்டைப் 100 செ.மீ. நீளமானது, தடித்தவை, தளத்தில் நீளமான ப்ரவுன் நிறமான உரோமங்களுடையது; பின்னே 12 ஜோடிகள், மாற்றுஅடுக்கமானவை, சிற்றிலையின் காம்புடையது; பின்னுல்ஸ் 7.5-12 x 1.5-2.5 செ.மீ., சிறகு போன்று காணப்படுபவை, பிளவுகள் மாற்றுஅடுக்கமானவை, நீள்சதுர வடிவானது, 0.7-1.5 X 0.2-0.4 செ.மீ., அலகின் விளிம்பு பிறை போன்ற பற்களுடையது, ஜவ்வு போன்றது; நரம்புகள் கிளைத்தவை.
கனி / விதை : நரம்புகள் கிளைத்த பகுதியில் ஸ்பொர்ஸ் உருவாக்கும் அமைப்பான கோள வடிவானது சொரை காணப்படுகின்றன.

வாழியல்வு :

நீரோடைகளின் அருகாமையில், குறிப்பாக 1000-2200 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு_தொடர்ச்சி மலைகளில் தெற்கு சயாத்திரி காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Kew Bull. 19. 468. 1965; Manickam and Irudayaraj, Pteridophyte flora of the Western Ghats - south India. 160. 1992.

Top of the Page