சைனோமிட்ரா பெட்டொமை Prain. - ஃபேபேசி-சிசல்பினிஆய்டியா

இணையான பெயர் : சைனோமிட்ரா போர்டிலோனை Gamble

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரம் 20 மீ. உயரம் வரை வளரக்கூடியது
இலைகள் : கூட்டிலை, இரட்டைபடை சிறகுவடிவக்கூட்டிலை (பேரிபின்னேட்); இலையடிச்செதில் உதிரக்கூடியது; சிற்றிலைகள் 3 ஜோடிகள்; தளப்பகுதியில் உள்ள ஜோடி சிற்றிலைகள் சிறியது, சிற்றிலையின் அலகு 2.5-3.5 X 1-1.5 செ.மீ., நீள்வட்டம்-தலைகீழ் முட்டை வடிவம் மற்றும் சமமற்றது, அலகின் ந
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படும்
கனி / விதை : பாட் கனி (அவரைப்போன்றது), உருண்டையானது மற்றும் நீள்வாக்கில் பள்ளங்களுடையது 1-3 செ.மீ. வரை நீளமானது, 1-விதை.

வாழியல்வு :

கடல் மட்டத்திலிருந்து 500 மீ. முதல் 800 மீ. உயரம் வரையுள்ள பசுமைமாறாக்காடுகளில் உள்ள நீரோடைகளின் ஒரங்களில் காணப்படும்

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் (என்டமிக்) - தெற்கு சாயாத்திரியிலுள்ள அகஸ்த்திய மலையின் மேற்கு பகுதி மற்றும் அரிதாக மத்திய சாயாத்திரி பகுதியில் உள்ள வயநாடு மற்றும் கூர்க் பகுதியில் காணப்படும்

தற்போதைய நிலை :

அழியக்கூடிய தருவாயில் (எண்டோன்ஜர்டு) உள்ளவை (ஐ.யூ.சி.எண்., 2000)

சான்று ஏடு :

J. Asiat. Soc. Bengal 65: 478. 1897; Gamble, Fl. Madras 1: 413 & 414. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 154. 2004; Saldanha, Fl. Karnataka 1: 389. 1996.

Top of the Page