டையோஸ்பைரஸ் பெர்கிரைனா (Gaertn.) Gurke - எபனேசி

இணையான பெயர் : டையோஸ்பைராஸ் மலபாரிக்கா (Desr.) Kostel.

தமிழ் பெயர் : பணிக்கை, பணிக்கா, தும்பிகா

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரம், 12 மீ. உயரம் வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை பழுப்பு கலந்த கருப்பு நிறமுடையது, வெடிப்புகளுடையது, பட்டையின் உட்புறம் சிவப்பு நிறமுடையது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : புதிய சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது முதல் சிறிதளவு கோண வடிவமுடையது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு 1.5 செ.மீ. வரை நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட், உரோமங்களற்றது; இலை அலகு 19 X 6.5 செ.மீ., நீள்சதுரம்-ஈட்டி வடிவமுடையது, அலகின் நுனி கூரியது முதல் மழுங்கியது, அலகின் தளம் கூரியது முதல் அட்டனுவேட், அலகின் விளிம்பு முழுமையானது, கோரியேசியஸ், உரோமங்களற்றது; இருபரப்பிலும் தெளிவான வலைப்பின்னல் கொண்டது; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 8 ஜோடிகள்;
மஞ்சரி / மலர்கள் : ஓர்பால் மலர்கள், ஈரகம் கொண்டவை; ஆண்மஞ்சரி 3-7 மலர்கள் கொண்டவை, இலைக்கோணங்களில் காணப்படும் சைம்; பெண்மலர்கள் தனித்தவை, இலைக்கோணங்களில் காணப்படும்.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), உருண்டையானது, 4 செ.மீ. குறுக்களவுடையது, சிவப்பு நிறமான மெண்மையான உரோமங்களுடையது (வெல்வெட்), பழத்தின் புல்லி இதழ்கள் பெரியது, வளைந்தது; விதைகள் 4-8 வழுவழுப்பானது, கனியின் சதை பிசுபிசுப்பானது, சதை வெளிவந்தவுடன் கருப்பு நிறத்திற்கு மாற

வாழியல்வு :

ஆற்று கரை ஒரங்களில் காணப்படும்.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா; மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் காணப்படும்.

சான்று ஏடு :

Engl. & Prantl. Nat. Pflanzenfam. 4: 164. t. 87. 1891; Gamble, Fl. Madras 2: 777. 1997(re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 271. 2004; Singh, Monograph on Indian Diospyros L. (Persimmon, Ebony) Ebenaceae. 193. 2005.

Top of the Page