டையோஸ்பைரஸ் சல்தானா Kostermans - எபனேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரம், 10 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை கருப்பு நிறமுடையது, வழுவழுப்பானது, உள்பட்டை வெளிறிய சிவப்பு நிறமுடையது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் அடர்த்தியானது, உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு 0.2-0.4 செ.மீ. நீளமானது, தடித்தது, அடர்ந்த உரோமங்களுடையது; இலை அலகு 5-14 X 2.2-6 செ.மீ., நீள்சதுர வடிவமுடையது, அலகின் நுனி கூரியது முதல் வால் போன்று நீண்டது, அலகின் தளம் வட்டமானது முதல் சிறு இதய வடிவானது, (சப்கார்டேட்), சப்கோரியேசியஸ், புதிய இலைகளில் இருபரப்பிலும் அடர்த்தியான மென்உரோமங்களுடையது, முதிர்ந்த இலைகள் உரோமங்களற்றது, மையநரம்பில் மட்டும் உரோமங்கள் காணப்படும்; இரண்டாம் நிலை நரம்புகள் 6-11 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் பரந்த வலைப்பின்னல் அமைப்பு கொண்டது.
மஞ்சரி / மலர்கள் : ஓர்பால் மலர்கள்; பெண்மலர்கள் 1-3 கொத்தாக இலைக்கோணங்களில் காணப்படுபவை.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), கூம்பு அல்லது நீள்வட்டம்-முட்டை வடிவமுடையது மற்றும் அடர்ந்த ஊசி போன்ற உரோமங்களுடையது; பழத்தின் நிரந்தரமான புல்லி இதழ்கள் நீள்சதுரமானது; விதைகள் 3-4

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, கடல் மட்டத்திலிருந்து 900 மீ. உயரம் வரையான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில் காணப்படும்.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுகிறது - அதிகமாக மத்திய சாயாத்திரி பகுதிகளில் காணப்படுகிறது.

சான்று ஏடு :

J. Bom. Nat. Hist. Soc. 74: 326. 1978; Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 272. 2004; Singh, Monograph on Indian Diospyros L. (Persimmon, Ebony) Ebenaceae. 225. 2005; Saldanha, Fl. Karnataka 1: 341. 1996.

Top of the Page