டிப்டிரோகார்ப்பஸ் போர்டிலேனை Brandis - டிப்டிரோகார்ப்பேசி

:

தமிழ் பெயர் : கரண்ஜீலி

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய மரம் 50 மீ. உயரம் வரை வளரக்கூடியது
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறுநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, அடர்ந்த மஞ்சள் நிறமான உரோமங்களுடையது மற்றும் இலைகள் உதிர்ந்ததால் உண்டாகும் வட்டவடுக்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் அமைப்பு; இலையடிச்செதில்கள் முட்டை வடிவம் - ஈட்டி வடிவமுடையது, அடர்ந்த மஞ்சள் நிறமான உரோமங்களுடையது, 1.8 செ.மீ. நீளமானது, உதிரக்கூடியது; இலைக்காம்பு 4.5 செ.மீ., நீளம் வரை இருக்கும், நட்சத்திர வடிவ மென்உரோமங்களுடையது; இலை அலகு 20.5 X 15 செ.மீ., அகன்ற நீள்வட்டம் முதல் முட்டை வடிவம், அலகின் நுனிகூரியது, அலகின் தளம் வட்டமானது அல்லது சிறிய இதய வடிவானது (சப்கார்டேட்), அலகின் விளிம்பு முழுமையானது அல்லது பிறை வடிவ பற்களுடையது (கிரனேட்), மேற்பகுதியில் உரோமங்களற்றது, கீழ்பரப்பில் உரோமங்களுடையது, கோரியேசியஸ்; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட சிறிது உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 13-16 ஜோடிகள், தடித்தது, கிட்டதட்ட கிடைமட்டமானது, விளிம்பு பகுதியில் வளைவானது; மூன்றாம் நிலை நரம்புகள் பெர்க்கரண்ட், கிட்டதட்ட இணையானது மையநரம்பை ஒட்டி வளைவானது
மஞ்சரி / மலர்கள் : ரெசீம் மஞ்சரி, மலர்கள் வெண்நிறமுடையது.
கனி / விதை : உலர்கனி (நட்), குறுக்குவெட்டுத் தோற்றத்தில் 2.5 செ.மீ., வரை நீளமானது, ஐந்து இறகு போன்ற புல்லி இதழ்களால் சூழப்பட்டது; புல்லி இதழ்கள் நிரந்தரமானவை, 2 பெரியது மற்றும் மூன்று சிறியது.

வாழியல்வு :

எமர்ஜெண்ட் மரங்களாக (காடுகளின் மேல்மட்ட அடுக்கை விட மிக உயர்ந்த மரமாக), குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 600 மீ. உயரம் வரை உள்ள அதிகம் மழை பெறும் பசுமைமாறாக்காடுகளில் காணப்படுகிறது.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுகிறது - அதிகமாக செங்கோட்டை கணவாய் மற்றும் பாலக்காடு கணவாயின் தெற்கு ஓரத்திலும் காணப்படும்; ஆங்காங்கே வடக்கு பாலக்காடு கணவாய், நிலம்பூர் மலை மற்றும் புஸ்பகிரி (கூர்க் பகுதி) பகுதிகளில் காணப்படுகிறது.

சான்று ஏடு :

Hooker, Icon. Pl. 5 (1): 2403. 1895; Gamble, Fl. Madras 1: 81. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 44. 2004.

Top of the Page