ட்ரைபீட்டஸ் போர்ட்டரி (Gamble) Pax & Hoffm. - ஈபோர்பியேசி

இணையான பெயர் : கெமிசைக்களியா போர்ட்டரி Gamble

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 10 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, பெரிய செதில்களாக உரியக்கூடியவை; உள்பட்டை வெளிறிய ஆரஞ்சு நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் ப்ரவுன் அல்லது சாம்பல் நிறமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலையடிச்செதில் எளிதில் உதிரக்கூடியவை; இலைக்காம்பு 0.3-0.8 செ.மீ. நீளமானது; இலை அலகு 5-9 x 2-4 செ.மீ., நீள்வட்டம் முதல் முட்டை வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது மற்றும் மழுங்கிய முனை கொண்டது, அலகின் தளம் சமமற்றது, அலகின் விளிம்பு முழுமையானது, மெல்லிய கோரியேசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு அலகின் மேற்பரப்பிற்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 5-7 ஜோடிகளுடையது, சிலசமயங்களில் உரோமத்துடன் கூடிய டொமேஸ்சியாவை கோணங்களிலுடையது, குறிப்பாக தளத்திலுள்ள 1 அல்லது 2 நரம்புகளில் டொமேஸ்சியா காணப்படுகின்றன; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் கொண்டது.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் ஓர்பாலானவை, ஈரகம் கொண்டவை, இலைக்கோணங்களில் கூட்டமாக காணப்படுகின்றன.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), அடர்த்தியான ப்ரவுன் நிறமான உரோமங்களுடையது, விதைகள் இரண்டு கொண்டவை.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக குறைந்தளவு மழை பெறும் பசுமைமாறாக்காடுகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படுபவை. பொதுவாக வருசநாடு மலைகள் மற்றும் அரிதாக குறைந்தளவு மழை பெறும் அகஸ்த்திய மலை காடுகளிலும் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Engler, Pflanzenr. 81: 268. 1922; Gamble, Fl. Madras 2: 1300. 1993 (re. ed).

Top of the Page