டைசொசைலம் பெட்டொமை Hiern - மீலியேசி

Vernacular names : தமிழ்ப் பெயர்: அடந்தை.மலையாளப் பெயர்: அடண்டா, அகில்.

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மிகப்பெரிய மரம், 30 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வெளிறிய சாம்பல் நிறமானது, சொறிப் போன்ற பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது, சிறிய செதில்களாக உதிருபவை; உள்பட்டை மஞ்சள் நிறமானவை.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : கூட்டிலை, ஒற்றைபடை_சிறகு வடிவக்கூட்டிலைகள், 30 செ.மீ. நீளமானது, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போல் அமைந்தது; மத்தியகாம்பு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கோணங்களுடையது, பல்வினேட், உரோமங்களுடையது; சிற்றிலைக்காம்பு 0.8 செ.மீ. நீளமானது; சிற்றிலைகள் 7-9 ஜோடிகள், மாற்றுஅடுக்கமானவை, 10-15 X 4-5.5 செ.மீ., நீள்சதுர வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியதுடன் அதன் முனை மழுங்கியது, அலகின் தளம் கூரியது மற்றும் சமமற்றது, அலகின் விளிம்பு முழுமையானது, உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட சிறிது உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 12-20 ஜோடிகள், தெளிவற்றது; மூன்றாம் நிலை நரம்புகள் கண்களுக்கு புலப்படாது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படும் குட்டையான ரெசீம் அல்லது பேனிக்கிள்; மலர்கள் பச்சை-மஞ்சள் நிறமானவை, மிகச்சிறிய காம்புடையது.
கனி / விதை : வெடிகனி (கேப்சியூல்) முட்டைவடிவானது, நுனி நீட்சியுடையது, 7 X 5 செ.மீ., தாழ்ந்த நீள்வாக்கில் கோடுகளுடையது, மஞ்சள் நிறமானவை; விதைகள் 2-4, ஆரஞ்ச்-மஞ்சள் நிற பத்ரி (ஏரில்) உடையது.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக, ஆங்காங்கே மழை அதிகம் பெறும் பசுமைமாறாக்காடுகளில், குறிப்பாக 300 மற்றும் 1200 மீ. உயரத்திற்கு இடைப்பட்ட மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு_தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படும்- ஏலமலை மற்றும் ஆனைமலை ( தெற்கு சயாத்திரி).

தற்போதைய நிலை :

அழியக்கூடிய தருவாயில் (எண்டோன்ஜர்டு) உள்ளவை (ஐ.யூ.சி. எண்., 2000).

சான்று ஏடு :

Hooker, Fl. Brit. India 1: 548; Gamble, Fl. Madras 1: 178.1997 (re.ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 89. 2004.

Top of the Page