எலையோகார்ப்பஸ் டியூபர்குலேட்டஸ் Roxb. - எலையேகார்ப்பேசி

:

தமிழ் பெயர் : மலம் பின்னை, பத்ரட்சி, ருத்திராக்ஷம்

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய மரம் மற்றும் தாங்கு வேர்களுடையது (பட்ரஸ்டு), 40 மீ. உயரம் வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வழுவழுப்பானது, மரத்தின் பட்டை ஒழுங்கற்ற சாம்பல் மற்றும் வெண்மையான நிறமுடைய புள்ளிகளுடையது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : கிளைகள் கிடைமட்டமானது; சிறிய நுனிக்கிளைகள் தடித்தது, இலைகள் விழுந்த தழும்புகளை கொண்டது, புதிய சிறிய கிளைகளில் அடர்ந்த மென்உரோமங்கள் கொண்டவை.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்ற அமைப்பு, சிறுகிளைகளின் நுனியில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாக காணப்படும்; இலையடிச்செதில் முட்டை வடிவம், சிறிது வளைவானது, உதிரக்கூடியது; இலைக்காம்பு 1.5-5 செ.மீ. நீளமானது, அடர்த்தியான மென்மையான உரோமங்களை புதிய இலைக்காம்பில் காணப்படும், குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ்; இலை அலகு 9-30.5 X 5-14 செ.மீ. அகன்ற தலைகீழ் முட்டை வடிவம், அலகின் நுனி வட்டமானது முதல் மழுங்கியது, சிலவற்றில் சிறிது பள்ளம் காணப்படும், அலகின் தளம் குறுகியது மற்றும் மழுங்கியது, அலகின் விளிம்பு முழுமையானது அல்லது பிறை-ரம்ப பற்களுடையது, கோரியேசியஸ், அடர்த்தியான மென்மையான உரோமங்கள் புதிய இலைகளிலும் காணப்படும், முதிர்ந்த இலைகளில் உரோமங்கள் மையநரம்பு மற்றும் நரம்புகளில் காணப்படும்; மையநரம்பு மேற்பரப்பில் உயர்ந்தது; இரண்டாம் நிலை நரம்புகள் 9-14 ஜோடிகள், உரோமங்களுடைய டொமேஸ்சியா இலையின் கீழ்பரப்பில் நரம்பின் கோணங்களில் காணப்படும்; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படும் அல்லது அதற்கு சற்று மேல் அமைந்த ரெசீம், மென்மையான உரோமங்களுடையது; மலர்கள் வெண்மையானது மற்றும் லேசினேட் அல்லி இதழ்கள்; மகரந்தங்கள் கணக்கற்றவை, ஈட்டி போன்ற மகரந்த பை உடையது.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), நீள்வட்டம்-நீள்சதுரமுடைய, 5 X 3 செ.மீ. வரை நீளமானது; ஒரு விதை கொண்டது, தட்டையானது மற்றும் கழலைகளுடையது.

வாழியல்வு :

எமர்ஜெண்ட் மரங்களாக (காடுகளின் மேல்மட்ட அடுக்கை விட மிக உயர்ந்த மரமாக) - மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1400 மீ. உயரம் வரையான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகள் மற்றும் பகுதி பசுமைமாறாக்காடுகளில் உள்ள ஓடைகளின் ஓரங்களில் காணப்படும்

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் - தெற்கு மற்றும் மத்திய சாயாத்திரி பகுதியில் காணப்படுகிறது.

சான்று ஏடு :

Roxburgh, Fl. Ind. 2: 594. 1832; Gamble, Fl. Madras 1: 124. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 65. 2004; Saldanha, Fl. Karnataka 1: 214. 1996.

Top of the Page