எலையோகார்ப்பஸ் வேரியஃபிளிஸ் Zmarzty - எலையோகார்ப்பேசி

இணையான பெயர் : எலையோகார்ப்பஸ் க்கலண்டுலோசஸ் Wall. ex Merr.; non எலையோகார்ப்பஸ் டெக்டோரியஸ் (Lour.) Poir. ; எலையோகார்ப்பஸ் ஒப்லான்ங்கஸ் Gaertn. Sensu auctt.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரம் 20 மீ. உயரம் வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை அரக்கு நிறமுடையது, லெண்டிசெல்லேட்லேட், பட்டையின் உட்புறம் வெள்ளை நிறம் முதல் கிரீம் நிறமுடையது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : கிளைகள் “ஆப்ரவில் மாதிரி” முறையில் கிளைக்கும், சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது மற்றும் இலைகள் விழுந்த தழும்பு காணப்படும், லெண்டிசெல்லேட்லேட்.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்ற அமைப்பு, சிறுகிளைகளின் நுனியில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாக காணப்படும்; இலைக்காம்பு 3 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், பர்புள் நிறமுடையது; இலை அலகு 8 X 5 செ.மீ. அகன்ற நீள்வட்டம் முதல் நீள்வட்டம்-நீள்சதுரம் வடிவமுடையது, அலகின் நுனி கூரியது, அலகின் தளம் கூரியது, அலகின் விளிம்பு ரம்ப பற்களுடையது, சப்கோரியேசியஸ், உரோமங்களற்றது, இலைகள் உதிரும் போது சிவப்பு நிறமுடையது; மையநரம்பு மற்றும் நரம்புகள் பர்புள் நிறமுடையது; இரண்டாம் நிலை நரம்புகள் 7 ஜோடிகள், கிளைத்தது மற்றும் உரோமங்களற்ற டொமேஸ்சியா இலைகளின் கீழ்பரப்பில் உள்ள நரம்புகளின் கோணங்களில் காணப்படும்; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படும் ரெசீம், பர்புள் 15 செ.மீ. வரை நீளமானது, மலர்காம்பு 1 செ.மீ. நீளமானது, பர்புள் நிறமுடையது; மலர்கள் வெண்மையானது மற்றும் லேசினேட் இதழ்கள்.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), நீள்வட்டமானது, 4 X 3 செ.மீ. ஒரு விதை கொண்டது.

வாழியல்வு :

பசுமைமாறாக்காடுகளின் விளிம்புகளிலும் மற்றும் ஒடைகளின் ஓரங்களிலும் காணப்படும்

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுகிறது அரிதாக தெற்கு, மத்திய மற்றும் தென்மஹாராஷ்ட்ரா சாயாத்திரி பகுதிகளில் காணப்படுகிறது.

சான்று ஏடு :

Kew Bull. 56: 429. 2001; Saldanha, Fl. Karnataka 1: 211. 1996.

Top of the Page