எக்சோகேரியா ஆப்போசிட்டிஃபோலியா Griff. ரகம் கிரனுலேட்டா (Wt.) Chakrab. & Gangop. - ஈஃபோர்பியேசி

இணையான பெயர் : எக்சோகேரியா கிரனுலேட்டா Wt. ; எக்சோகேரியா ரொபேஸ்டா J.Hk.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள், 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
சாறு : வெள்ளை நிறமான பால் அதிகளவில் சுரக்ககூடியது
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கமானவை; இலையடிச்செதில் எளிதில் உதிரக்கூடியது; இலைக்காம்பு 0.7-1 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 15.2 X 3.8 செ.மீ., தலைகீழ் ஈட்டி வடிவம் முதல் நீள்வட்டம்-ஈட்டி வடிவானது, சார்ட்டேசியஸ், அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது, அலகின் விளிம்பு பிறை வடிவ பற்களுடையது; இரண்டாம் நிலை நரம்புகள் 10-16 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற சாய்ந்த பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் ஓர்பாலானவை, ஈரகம் கொண்டவை; ஆண்மலர்கள் மெலிந்த ஸ்பைக் வகை மஞ்சரி, இலைக்கோணங்களில் அமைந்தவை, 5 செ.மீ. நீளமானது; பெண்மலர்கள் குறைந்தளவு மலர்கள் கொண்ட ரெசீம் வகை மஞ்சரி, இலைக்கோணங்களில் அமைந்தவை
கனி / விதை : வெடிகனி (கேப்சூல்), மூன்று பக்கங்களுடையது; விதைகள் 3, கோளவடிவானது.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக பசுமைமாறாக்காடுகளில் குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 500-2100 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

தீபகற்ப இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் - தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி மலைகளில் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

J. Econ. Taxon. Bot. 18: 208. 1994; Wight, Ic. 1865. 1852; Gamble, Fl. Madras 2:1345.1993 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 419. 2004; Saldanha, Fl. Karnataka 2: 132.1996.

Top of the Page