English   Kannada   Tamil   
மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு
வளரியல்பு : | மரங்கள் 25 மீ. உயரம் வரை வளரக்கூடியது, எண்ணற்ற தொங்கு வேர்களுடையவை, தடித்த கிளைகளில் கொத்தாக தோன்றக்கூடியவை |
தண்டு மற்றும் மரப்பட்டை : | மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, பட்டைத்துளைகள் (லெண்டிசெல்லேட்) உடையது; உள்பட்டை கிரீம் நிறமானது. |
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : | சிறியநுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது ( உலரும் போது சுருக்கங்களுடையவை (ருக்கோஸ்)), ப்ரவுன் நிறமான உரோமங்களுடையது. |
சாறு : | வெள்ளை நிற பால் அதிகளவு சுரக்கிறது |
இலைகள் : | இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலையடிச்செதில் 1 செ.மீ. நீளமானது, உரோமங்களுடையது, எளிதில் உதிரக்கூடியது மற்றும் வட்டவடுக்களை ஏற்படுத்துகின்றன; இலைக்காம்பு 1.5-3.5 செ.மீ. நீளமானது, இலைக்காம்பு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களுடையது; இலை அலகு 10-22 x 6-15 செ.மீ., அகன்ற நீள்வட்ட-நீள்சதுர வடிவானது அல்லது முட்டை வடிவானது, அலகின் நுனி கூரியது அல்லது அதிக்கூரியது, அலகின் தளம் வட்டமானது அல்லது சிறிய இதய வடிவானது, அலகின் விளிம்பு முழுமையானது, இளம்பருவத்தில் ப்ரவுன் நிறமான உரோமங்களுடையது, முதிரும் போது நுண்ணிய உரோமங்களுடையது அல்லது உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 8-12 ஜோடிகள், தெளிவானது; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றவை. |
மஞ்சரி / மலர்கள் : | மஞ்சரி சைகோனியம், இலைக்கோணங்களில் காணப்படுபவை, தனித்தவை, கோளவடிவானது, காம்பற்றது, ப்ரவுன் நிறமான உரோமங்களுடையது; மலர்கள் ஓர் பாலானவை. |
கனி / விதை : | சைகோனியம், காம்பற்றது, நீள்சதுர வடிவானது அல்லது தலைகீழ் முட்டை வடிவானது, 2.5 செ.மீ. நீளமானது, கனியும் போது ஆரஞ்ச்-மஞ்சள் நிறமானவை, உரோமங்களுடையது; சிற்றுலர்கனி (அக்கீன்) வழவழப்பானது. |