ஹெரிடிரியா பாப்பிலியோ Bedd. - ஸ்டர்குலியேசி

Vernacular names : தமிழ்ப் பெயர்: சவுண்டலைஉன்னு, சடநாங்கு, சொக்லாமலையாளப் பெயர்: சொக்லா மரம், சோலைசடச்சிஆங்கிலப் பெயர்: சுந்தரி

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள், தாங்கு_வேர்களுடையவை (பட்ரஸ்டு) 30 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தண்டு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் ஒழுங்கற்ற_வளையமானது; மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, பெரிய செதில்களாக உதிருபவை; உள்பட்டை சிவப்பு நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் தடித்தவை, செதில்களாக உதிருபவை, உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை, சிறுகிளைகளின் நுனியில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாக காணப்படும்; இலையடிச்செதில் 0.3 செ.மீ. நீளமானது, நுண்ணிய செதில்களுடையது, ஈட்டி வடிவானது அல்லது மெல்லிய நீண்ட கூர்மையான நுனியுடையது, பக்கவாட்டில் அமைந்தவை, எளிதில் உதிரக்கூடியது மற்றும் தழும்புகளை ஏற்படுத்துகின்றன; இலைக்காம்பு தடித்தவை, 0.6-2.5 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, நுண்ணிய செதில்களுடையது, காம்பின் இருமுனைகளும் உப்பியது; இலை அலகு 7.5-13 (-21) X 2.6-6.5 செ.மீ., முட்டை வடிவானது முதல் முட்டை-ஈட்டி வடிவானது, அலகின் நுனி கூரியது முதல் சிறிது அதிக்கூரியது, அலகின் தளம் வட்டமானது-சிறிய இதய வடிவானது, அலகின் விளிம்பு முழுமையானது, மெல்லிய கோரியேசியஸ், அலகின் கீழ்பரப்பில் வெள்ளி நிற லெப்பிடோட் செதில்களுடையது, அலகின் மேற்பரப்பில் உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; தளத்திலே 3_நரம்புகளை உடையது; இரண்டாம் நிலை நரம்புகள் 3-6 ஜோடிகள் (பக்கவாட்டில் அமைந்த நரம்புகளை தவிர) நுனி நோக்கி வளைந்தவை; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல்-பெர்க்கரண்ட் போன்றவை, சிலசமயங்களில் கண்களுக்கு புலப்படாது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படுபவை, பேனிக்கிள் வகை; மலர்கள் ஓர் பாலானவை, சிறியவை, கீரிம் நிறமானது.
கனி / விதை : சிறகுடைய கனி (சாமாரா), ப்ரவுன் நிறமானது, 3.6 (-6.4) செ.மீ. நீளமானது; ஒர் விதையுடையது.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக, மழை அதிகம் பெறும் பசுமைமாறாக்காடுகளில் 400-1400 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

இந்தியா; மேற்கு தொடர்ச்சி மலைகளில்-தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி பகுதிகளில் காணப்படுபவை.

சான்று ஏடு :

Fl. Sylv. T. 218. 1872; Gamble, Fl. Madras 1: 104. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6: 57. 2004.

Top of the Page