ஹோலிகர்னா கிரகமை (Wt.)Kurz. - அனகார்டியேசி

இணையான பெயர் : செமிகார்பஸ் கிரகமை Wt.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : உயர்ந்த பெரிய மரம் 35 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வழுவழுப்பானது, பழுப்பு நிறத்துடன் காணப்படும்.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் தடிமனாகவும், பொன் நிறமான செம்பழுப்பு உரோமங்கள் கொண்டது.
சாறு : கறுப்பு நிறத்துடன் காணப்படும்.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை, நுனிக்கிளையில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாகமைந்தவை; இலைக்காம்பு 2 செ.மீ. நீளமுடையது, பொன் நிறமான அரக்கு உரோமங்கள் இலைக்காம்பில் காணப்படும், மற்றும் இரண்டு ஜோடி தடித்த அடர்த்தியான மென்உரோமங்களுடைய ஸ்பர்; இலை அலகு 15-44 X 10-17 செ.மீ., தலைகீழ் ஈட்டி வடிவம், அலகின் நுனி அதிக்கூரியதுடன் அகலமான முக்கோண வடிவ ம், அலகின் தளம் குறுகிய ஆப்பு வடிவமுடையது, அலகின் விளிம்பு முழுமையானது, கோரியேசியஸ், பொன் நிறமான அரக்கு மென்உரோமங்கள் இலையின் கீழ்பரப்பிலும், மேற்புறத்தில் உரோமங்களற்றும் காணப்படும், மையநரம்பு இலையின் பரப்பிற்கு சமமானது மற்றும் உரோமங்களற்றும் காணப்படும்; இரண்டாம் நிலை நரம்புகள் 22-32 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைபின்னல் அமைப்பு கொண்டது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தண்டின் நுனியில் அமைந்த பேனிக்கிள், அரக்கு நிறமான மென்உரோமங்கள் கொண்டது, மலர்கள் இருபாலானவை, வெள்ளை நிறமானது.
கனி / விதை : நீள்வட்ட உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), 2.2 செ.மீ. நீளமுடையது, பூத்தண்டு கிண்ணத்தை விட்டு வெளியில் துறுத்திக்கொண்டிருக்கும், அரக்கு நிறமான உரோமங்கள், ஒரு விதையுள்ள கனி.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக, குறைந்த உயரமுடைய மலைகளிலுள்ள (கடல் மட்டத்திலிருந்து 200-700 மீ. இடைப்பட்ட உயரம் வரை) பகுதி பசுமைமாறாக்காடுகள் மற்றும் அதிக மழை பெறும் பசுமைமாறாக்காடுகள்.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படும் - தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி மலையிலும் அரிதாக வடக்கு சயாத்திரி மலைகளிலும் காணப்படும்.

தற்போதைய நிலை :

அரிதானது (நாயர், 1997)

சான்று ஏடு :

J. As. Soc. Bengal 41: 306. 1872; Gamble, Fl. Madras 1: 268-269. 1997 (re. ed); Saldanha, Fl. Karnataka 2: 205. 1996; Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 112. 2004.

Top of the Page