ஹோமானியா ரிப்பேரியா Lour. - ஈபோர்பியேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 5 மீ. வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, சிறு செதில்களாக உதிரக்கூடியவை; உள்பட்டை வெளிறிய மஞ்சள் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, இளம் குறுத்தில் உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போல் அமைந்தது; இலையடிச்செதில் ஒர் ஜோடி, எளிதில் உதிரக்கூடியவை மற்றும் தழும்புகளை ஏற்படுத்த கூடியது; இலைக்காம்பு 1 செ.மீ. நீளமானது; இலை அலகு 16.5X2 செ.மீ., கோட்டு-ஈட்டி வடிவானது, அலகின் நுனி கூரியது, அலகின் தளம் ஆப்பு வடிவானது, அலகின் விளிம்பு முழுமையானது, சப்கோரியேசியஸ், சுரப்பிகளுடைய செதில்கள் அலகின் பின்புறத்தில் கொண்டது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; இரண்டாம் நிலை நரம்புகள் 15-19 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல் போன்றது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி இலைக்கோணங்களில் காணப்படும் ஸ்பைக்ஸ்; மலர்கள் சிவப்பு நிறமானவை, ஓர்பாலானவை, ஈரகம் கொண்டவை.
கனி / விதை : வெடிகனி (கேப்சூல்), 3-2 அறைகளுடைய காக்கை; விதைகள் 3, முட்டை வடிவானது.

வாழியல்வு :

ஒடைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா முதல் பசுபிக் தீவுகள் மற்றும் தென்சைனா; மேற்கு தொடர்ச்சி மலைகள் முழுவதும் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Loureiro, Fl. Cochinc. 637. 1790; Gamble, Fl. Madras 2: 1333. 1993 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 421. 2004; Saldanha, Fl. Karnataka 2: 147. 1996.

Top of the Page