ஹம்போல்டியா போர்டிலோனை Prain - ஃபேபேசி-சிசல்பினிஆய்டியா

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரம் 15 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை கறுப்பு நிறமானது.
இலைகள் : கூட்டிலை, இரட்டைபடை சிறகுவடிவக்கூட்டிலை (பேரிபின்னேட்); இலையடிச்செதில் முட்டை வடிவம், சிறியது, பால்கேட்; ரேக்கிஸ் தட்டையானது மற்றும் இறகு உடையது; சிற்றிலைகள் 3-4 ஜோடிகள், இலை அலகு 7.6-10.2 X 2.5-3.8 செ.மீ., ஈட்டிவடிவம்-தலைகீழ் ஈட்டி வடிவம், இலையில் அலகின் நுனி சிறிது சிறிதாக குறுகிய அதிக்கூரியது முதல் வால் போன்று நீண்டது, அலகின் தளம் சமமற்றது, சார்ட்டேசியஸ்; இரண்டாம் நிலை நரம்புகள் 10 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல்-பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி முதிர்ந்த கிளையில் காணப்படுபவை, (காலிஃபுளோரஸ்), தொகுப்பான ரெசீம்ஸ், மிருதுவான மஞ்சள் கலந்த ப்ரவுன் நிறமானது; வெள்ளை நிறமான இதழ்களில் பிங்க் நிறமான நரம்புகள் காணப்படும்; புல்லி இதழ் பொன் நிறமான சிவப்பு நிறமுடையது.
கனி / விதை : பாட் கனி (அவரைப்போன்றது), கருஞ்சிவப்பு நிறமானது உரோமங்களுடையது.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக, கடல் மட்டத்திலிருந்து 900 மீ. - 1000 மீ. உயரம் வரை உள்ள மழை அதிகம் பெறும் பசுமைமாறாக்காடுகளில் காணப்படும்.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் (என்டமிக்), தெற்கு சயாத்திரி பகுதியில் உள்ள அகஸ்த்திய மலை, மற்றும் ஏலமலை பகுதிகளில் காணப்படும்.

தற்போதைய நிலை :

அழியக்கூடிய தருவாயில் (எண்டோன்ஜர்டு) உள்ளவை (ஐ.யூ.சி.எண்., 2000)

சான்று ஏடு :

J. Asiat. Soc. Bengal 73: 200. 1904; Gamble, Fl. Madras 1: 411. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 155. 2004.

Top of the Page