ஜீலோஸ்டைலிஸ் பாலிஆண்ட்ரா Ravi & Anilkumar - மால்வேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் தற்போதைய நிலை சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 12 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, குறுத்தில் துரு போன்ற நட்சத்திர வடிவுடைய உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போல் அமைந்தது; இலையடிச்செதில் எளிதில் உதிருபவை; இலைக்காம்பு 1-8 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, நட்சத்திர வடிவுடைய உரோமங்களுடையது; இலை அலகு 4-21 X 2-18 செ.மீ., ஏறக்குறைய வட்டவடிவானது (ஆர்பிக்குலார்) முதல் முட்டை வடிவானது, அலகின் நுனி மழுங்கியது அல்லது கைவடிவ தாழ்ந்த 3-பிளவுகளுடையது, அலகின் தளம் வட்டமானது அல்லது ஆப்பு வடிவானது, அலகின் விளிம்பு பிறை வடிவ பற்களுடையது, அலகின் இருபுறங்களும் குறைந்த அளவு நட்சத்திர வடிவ உரோமங்களுடையது, குறுத்து இலைகள் சிவப்பு நிறமுடையவை; அலகின் தளத்திலே 5 கைவடிவ நரம்புகளை உடையது; மையநரம்பு அலகின் மேற்பரப்பைவிட உயர்ந்தது; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற விளிம்பை நோக்கிய பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி பேனிக்கிள் வகை, பல மலர்களுடையது; மலர்கள் மஞ்சள் நிறமானது; மலர்காம்பு 1.5 செ.மீ. நீளமானது; எபிகேலிக்ஸ் கனியுடன் நிரந்தரமாக தங்கிவிடுபவை.
கனி / விதை : சைசோகார்ப், வெடியாக்கனி, 0.5 செ.மீ. நீளமானது, மிகச்சிறிய அலகுடையது, அடர்த்தியாக நட்சத்திர வடிவ மற்றும் கிளைக்காத உரோமங்களுடையது; விதைகள் 4, சிறு நீரக வடிவானது.

வாழியல்வு :

மிதமான உயரமுடைய மலைகளிலுள்ள அதிக மழை பெறும் பசுமைமாறாக்காடுகளின் விளிம்புகளில், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 800-1000 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படுபவை - அகஸ்த்திய மலை மற்றும் பெரியார் பகுதிகளில் காணப்படுபவை.

தற்போதைய நிலை :

அழியக்கூடிய தருவாயில் (எண்டோன்ஜர்டு) உள்ளவை (ஐ.யூ.சி.எண்., 2000)

சான்று ஏடு :

J. Bombay Nat. Hist. Soc. 87: 260. 1990; Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 51. 2004.

Top of the Page