லாஜர்ஸ்ட்ரோமியா மைக்ரோகார்ப்பா Wt. - லைத்ரேசி

:

தமிழ் பெயர் : வெண்தேக்கு

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மிகப்பெரிய இலையுதிர் மரம், 25 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வழுவழுப்பானது, வெள்ளை நிறமானது, உரியக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, மிக நுண்ணிய உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை முதல் கிட்டதட்ட எதிரடுக்கம் போன்றவை, சிலசமயங்களில் தண்டின் நுனியில் காணப்படும் இலைகள் மாற்றுஅடுக்கமானவை; இலைக்காம்பு 0.5 செ.மீ., குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், மிக நுண்ணிய உரோமங்களுடையது; இலைக்காம்பு 0.5 செ.மீ. நீளமானது; இலை அலகு 11 X 4.5 செ.மீ., நீள்வட்ட வடிவம், அலகின் நுனி கூரியது முதல் அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது, அலகின் இருபுறங்களும் உரோமங்களற்றது, வெள்ளை நிறமான மெழுகு பூசினது (க்களாக்கஸ்), போன்றது; மையநரம்பு அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 8-10 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் நெருக்கமானது, விளிம்பை நோக்கிய பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் இலைக்கோணங்களில் காணப்படும் பேனிக்கிள்; புல்லி இதழ்கள் வெள்ளை நிறமானது.
கனி / விதை : வெடிகனி (கேப்சூல்), நீள்வட்ட வடிவானது, தடித்தவை, 4 அறைகளுடையவை, லாக்யூலிசைடல், 1 செ.மீ. நீளமானது; விதைகள் எண்ணற்றவை, தட்டையானது, நேரானது, பால்கேட் போன்ற சிறகு நுனியுடையது.

வாழியல்வு :

அதிகமாக இலையுதிர் மற்றும் பகுதி பசுமைமாறாக்காடுகளில் மற்றும் ஆங்காங்கே பசுமைமாறாக்காடுகளின் விளிம்பு மற்றும் மரங்கள் நெருக்கமற்ற பகுதிகளிலும் காணப்படுபவை, கடல் மட்டத்திலிருந்து 1000 மீ. வரை காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் (முழுவதும்) மட்டும் காணப்படுபவை.

சான்று ஏடு :

Wight, Ic. t. 109. 1839; Gamble, Fl. Madras 1: 513. 1997 (re. ed); Saldanha, Fl. Karnataka 2: 12. 1996; Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 188. 2004.

Top of the Page