மெக்கராங்கா இண்டிகா Wt. - ஈபோர்பியேசி

:

தமிழ் பெயர் : வட்டக்கன்னி, வட்டதாமரை

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 16 மீ. உயரம் வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, வழுவழுப்பானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, சாம்பல் நிறமான மென்உரோமங்களுடையது. மெழுகு பூசினாற் போல் நீல நிறம் கலந்த பச்சை நிறமானது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போல் அமைந்தது; இலையடிச்செதில் பெரியது, எளிதில் உதிரக்கூடியவை; இலைக்காம்பு 5-31 செ.மீ., நீளமானது; இலை அலகு 13.5-30 X 10.5-18.5 செ.மீ., பெல்டேட், (அலகின் பின்புறத்தில் நடுவில் காம்பு கொண்டது), வட்டவடிவானது (ஆர்பிக்குலார்)-முட்டை வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் வட்டமானது, சப்கோரியேசியஸ், உரோமங்களுடையது; மற்றும் பிசின் (ரெசின்) கொண்ட மஞ்சள் நிறமான சுரப்பிகள் இலையின் அடிப்புறத்திலுடையவை; நரம்புகள் 8-9, இலையின் நடுவிலிருந்து விளிம்பை நோக்கியவாறு காணப்படும்.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் ஓர்பாலானவை; ஈரகம் கொண்டவை; மஞ்சரி பேனிக்கிள் ஆங்கில எழுத்து Z வடிவான கிளைகள் போன்றவை, பூவடிச்செதில் கோட்டு வடிவானது மற்றும் பெரிய தட்டையான சுரப்பியுடையது; ஆண்மலர்கள் கொத்தானவைகளாக ஒர் பூவடிச்செதிலின்று உருவாகக்கூடியது; பெண்மலர்கள் எண்ணிக்கையில் குறைந்தவையாக, ஓர் செதிலில் காணப்படும்.
கனி / விதை : வெடிகனி (கேப்சூல்), கோளவடிவானது; விதை ஒன்று கொண்டது.

வாழியல்வு :

ஹிலியோபில்லஸ், மரங்கள் அடர்த்தியற்ற இடங்கள் கொண்ட பசுமைமாறாக்காடுகளில் காணப்படுகின்றன, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 900-2000 மீ. வரையுள்ள மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி காடுகளில் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Wight, Ic. 1883. 1852; Gamble, Fl. Madras 2: 1326. 1993 (re.ed.); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 421. 2004; Saldanha, Fl. Karnataka 2: 150. 1996.

Top of the Page