மலோட்டஸ் பிலிப்பன்சிஸ் (Lam.) Muell.-Arg. - ஈபோர்பியேசி

:

தமிழ் பெயர் : கமலா, கானபெட்டா, கப்பிலா, கபிலபொடி, கபலி,கானஸ்பொட்டு, குங்கமம், குரங்கு மஞ்சநத்தி, மஞ்சனை, தாவட்டை.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 12 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தண்டு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் ஒழுங்கற்ற வளையமானது; மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, பிளவுகளுடையது; உள்பட்டை பர்புள் கலந்த ப்ரவுன் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, சாம்பல் நிறமான உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போல் அமைந்தது; இலையடிச்செதில் எளிதில் உதிரக்கூடியவை; இலைக்காம்பு 1.5-7.6 செ.மீ. நீளமானது, காம்பின் இருமுனைகளும் உப்பியவை, உரோமங்களுடையது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, வரித்தழும்புகளுடையது; இலை அலகு 6-22 X 3-11.5 செ.மீ., முட்டை முதல் முட்டை-ஈட்டி வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது முதல் வட்டமானது, அலகின் விளிம்பு முழுமையானது அல்லது ரம்ப பற்களுடையது, சார்ட்டேசியஸ், அலகின் மேற்பரப்பு உரோமங்களற்றது, அலகின் கீழ்பரப்பு உரோமங்களுடையது மற்றும் சிவப்பு நிறமான ரெசின் சுரக்ககூடிய சுரப்பிகளுடையது; அலகின் தளத்தில் மூன்று நரம்புகளுடையது இரண்டாம் நிலை நரம்புகள் 7 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் ஓர்பாலானவை, ஈரகம் கொண்டவை, தண்டின் நுனியில் காணப்படும் ஸ்பைக் மஞ்சரி.
கனி / விதை : வெடிகனி (கேப்சூல்), கோளவடிவானது, அடர்த்தியாக சிவப்பு நிறமான சுரப்பிகளுடையது; விதைகள் கருப்பு நிறமானது; அறைக்கு ஒன்றாக அமைந்தவை.

வாழியல்வு :

அதிகமாகவும், கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக பசுமைமாறாக்காடுகள் முதல் பகுதி பசுமைமாறாக்காடுகள் வரை குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1500 மீ. உயரம் வரையுள்ள மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

இண்டோமலேசியா மற்றும் ஆஸ்திரேலியா; மேற்கு தொடர்ச்சி மலைகள் முழுவதும் காணப்படுபவை.

சான்று ஏடு :

Linnaea 34: 196. 1865; Gamble, Fl. Madras 2: 1322. 1993 (re.ed.); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 423. 2004; Saldanha, Fl. Karnataka 2: 152. 1996.

Top of the Page