மலோட்டஸ் ஸ்டினாந்தஸ் Muell.-Arg. - ஈபோர்பியேசி

:

தமிழ் பெயர் : கருவாளிச்சீ

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 5 மீ. உயரம் வரை வளரக்கூடியது
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : இளம்குறுத்திலுள்ள கிளைகள் தட்டையானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கமானவை, எதிரேமைந்த ஜோடி இலைகள் சமமற்றது; இலையடிச்செதில்; சிறியது, நீள்வட்ட வடிவானது, உரோமங்களுடையது, எளிதில் உதிரக்கூடியவை; இலைக்காம்பு 0.2-1.8 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, காம்பின் இருமுனைகளும் உப்பியவை, உரோமங்களுடையது; இலை அலகு 5.5-14 X 2-6 செ.மீ., குறுகிய நீள்வட்ட-சாய்சதுர வடிவம் முதல் தலைகீழ் ஈட்டி வடிவானது, அலகின் நுனி வால் போன்றது, அலகின் தளம் கூரியது, சிலசமயங்களில் வட்டமானது முதல் சிறு பிளவுகளுடையது, அலகின் விளிம்பு ஒழுங்கற்ற பிளவு-பற்களுடையது, சப்கோரியேசியஸ், மஞ்சள் நிறமான ரெசின் சுரக்ககூடிய சுரப்பிகளை அலகின் அடிப்புறத்தில் கொண்டது; மையநரம்பு அலகின் மேற்பரப்பில் அதன் பரப்பைவிட உயர்ந்தது; இரண்டாம் நிலை நரம்புகள் 5-10 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் தளம் நோக்கிய பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் மெலிந்த ரெசீமாக தண்டின் நுனியில் அல்லது இலைக்கோணங்களில் அமைந்தவை.
கனி / விதை : வெடிகனி (கேப்சூல்), 3-அறைகளுடையது, மஞ்சள் நிறமான சுரப்பிகளுடன், எண்ணற்ற தடித்த முட்களுடையது; விதைகள் 3.

வாழியல்வு :

கீழ்மட்ட அடுக்கு (அன்டர்ஸ்டோரி) மரமாக பசுமைமாறாக்காடுகளில் குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 350-1800 மீ. வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுகிறது - தெற்கு, மத்திய மற்றும் தென்மஹாராஷ்ட்ரா சயாத்திரி மலைகளில் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Linnaea 34: 191. 1865; Gamble, Fl. Madras 2: 1322. 1993 (re.ed.); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 424. 2004; Saldanha, Fl. Karnataka 2: 152. 1996.

Top of the Page