மலோட்டஸ் டெட்ராகாக்கஸ் (Roxb.) Kurz - ஈபோர்பியேசி

இணையான பெயர் : ரோட்லர்ரா டெட்ராகாக்கா Roxb.; மலோட்டஸ் ஆல்பஸ் Muell.-Arg. ரகம் ஆக்ஸிடென்டாலிஸ் J.Hk.

தமிழ் பெயர் : முள்ளு பெலவு, வட்டா

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள் 12 மீ. உயரம் வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, லெண்டிசெல் கொண்டது; உள்பட்டை கிரீம் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் தட்டையானது, நட்சத்திர வடிவுடைய உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போல் அமைந்தது; இலையடிச்செதில் எளிதில் உதிரக்கூடியது; இலைகாம்பு 3-12.5 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, நட்சத்திர வடிவ உரோமங்களுடையது, காம்பின் இருமுனைகளும் உப்பியவை; இலை அலகு 8-25 X 6.5-20 செ.மீ., அகன்ற முட்டை முதல் வட்டவடிவானது (ஆர்பிகுலேட்), அலகின் நுனி கூரியது முதல் அதிக்கூரியது, இலைக்காம்பு அலகின் தளத்தின் நடுவே (பெல்டேட்) அமைந்தது, பொதுவாக அலகின் விளிம்பு முழுமையானது அல்லது மூன்று பிளவுகளுடையது (இளம்குருத்து நிலையில்), கோரியேசியஸ், அலகின் அடிப்புறம் அடர்த்தியாக வெள்ளை நிறமான நட்சத்திர வடிவ உரோமங்கள் கொண்டது; அலகின் தளத்திலே 3-5 நரம்புகளுடையது; மூன்றாம் நிலை நரம்புகள் கிட்டதட்ட இணையான பெர்க்கரண்ட்.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் ஓர்பாலானவை, ஈரகம் கொண்டவை; இலைக்கோணங்களில் அல்லது தண்டின் நுனியில் காணப்படும் பேனிக்கிள், நட்சத்திர வடிவ உரோமங்களுடையது.
கனி / விதை : வெடிகனி (கேப்சூல்), முட்களுடையது, மென்மையான முட்களலானது; விதைகள் 6.

வாழியல்வு :

பசுமைமாறாக்காடுகளின் விளிம்புகளில் குறிப்பாக 1600 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

இந்தியா, ஸ்ரீலங்கா, மீயான்மர்; மேற்கு தொடர்ச்சி மலைகள் முழுவதும் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Fl. Ind. 3: 827. 1832; Gamble, Fl. Madras 2: 1322. 1993 (re.ed.); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 424. 2004; Saldanha, Fl. Karnataka 2: 152. 1996.

Top of the Page