மைக்ரோட்ரோபிஸ் மைக்ரோகார்ப்பா Wt. - செலஸ்ட்ரேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறிய மரம் 8 மீ. வரை வளரக்கூடியது
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கமானவை; இலைக்காம்பு தோராயமாக 0.7 செ.மீ. நீளமானது; இலை அலகு 3-9.3 X 1.6-4.7 செ.மீ., நீள்வட்டம் முதல் முட்டை வடிவம், அலகின் நுனி மழுங்கியது, அலகின் தளம் வட்டமானது முதல் ஆப்பு வடிவம் கொண்டது, கோரியேசியஸ், கீழ்பரப்பு வெளிறியது, காய்ந்த இலைகள் பச்சை-சாம்பல் நிறமுடையது; இரண்டாம் நிலை நரம்புகள் 6-8 ஜோடிகள், மெலிதானது; மூன்றாம் நிலை நரம்புகள் அட்மீடியல்லி ராமிபைடு.
மஞ்சரி / மலர்கள் : சைம் மஞ்சரி, 4-8 செ.மீ. நீளமுடையது.
கனி / விதை : கேப்சூல், ப்ரவுன் நிறம், எபிகுலேட், புல்லி இதழ்கள் கனியுடன் உதிராமல் காணப்படும், ஒரு விதையுடையது, பத்திரி (ஏரில்லேட்) உடையது.

வாழியல்வு :

மிதமான உயரமுடைய (சப்கேனோப்பி) மரமாக 1600 மீ. முதல் 2300 மீ. உயரம் வரை உள்ள பசுமைமாறாக்காடுகளில் விளிம்புகளில் காணப்படும்.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படுகிறது (என்டமிக்) - பரவலாக நீலகிரி மலைகளிலும், பழனி மற்றும் அகஸ்த்திய மலை காடுகளிலும் காணப்படுகிறது.

சான்று ஏடு :

Wight, Ic. 3: 7. 975. 1845; Gamble, Fl. Madras 1: 207. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 97. 2004; Cook, Fl. Bombay 1: 229. 1902.

Top of the Page