ஒரோசைலம் இண்டிகம் (L.) Benth. ex Kurz - பிக்னோனியேசி

இணையான பெயர் : பிக்னோனியா இண்டிகா L.

தமிழ் பெயர் : ஆச்சிபனா, ஆரண்டை, பேய்யாரலாண்டை, பாலையாடச்சீ, பேய்ர்லாங்கை, பாலகைபாயாணி, வாங்கம்

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறியமரம், 12 மீ. வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை அரக்கு-சாம்பல் நிறமானது, மென்மையான லெண்டிசெல் உடையது.
இலைகள் : இலைகள் கூட்டிலைகள், இருமுறை கிளைத்த சிறகுவடிவக்கூட்டிலைகள் முதல் மூன்றுமுறை கிளைத்த சிறகுவடிவக்கூட்டிலைகள், பின்னே எதிரே அமைந்தது, மிக பெரியது 90-150 செ.மீ. நீளமானது, கிட்டதட்ட முக்கோண வடிவானது; மத்திய முதற்காம்பு தடித்தது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது; இரண்டாம் மற்றும் மூன்றாம் காம்புகள் கோடுகளுடையது; சிற்றிலையின் காம்பு 5.5 செ.மீ. நீளமானது, கோடுகளுடையது; சிற்றிலைகள் 2-4 ஜோடியுடன் நுனியில் ஒற்றை சிற்றிலையுடையது, சிற்றிலைகள் எதிரே அமைந்தவை, சிற்றிலையின் அலகு 7-17 X 3.5-10 செ.மீ. முட்டை அல்லது நீள்வட்ட வடிவானது, சிற்றிலையின் அலகு வால்-அதிக்கூரிய நுனியுடையது, வட்டமான அல்லது சமமற்ற தளமுடையது, அலகின் விளிம்பு முழுமையானது, சார்ட்டேசியஸ், கீழ்பரப்பு உரோமங்களற்றது; மையநரம்பு அலகின் மேற்பரப்புக்கு சமமானது; 1-2 ஜோடி இரண்டாம் நிலை நரம்புகள் தளத்திலே உண்டானவை; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல் போன்றது.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் தண்டின் நுனியில் காணப்படும் ரெசீம்ஸ், பெரியது, சிவப்பு-பர்புள் மற்றும் பிங்க்-மஞ்சள் நிறமுடைய உள்பக்கம் கொண்டது.
கனி / விதை : வெடிக்கனி (கேப்சூல்), 39-90 செ.மீ. நீளமானது, தட்டையானது, பர்புள் அரக்கு நிறமானது; விதைகள் எண்ணற்றது, தட்டையானது, வெள்ளை நிறமான தாளைப் போன்ற சிறகுடையது.

வாழியல்வு :

இந்தோசைனா மற்றும் இந்தோமலேசியா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் - ஆங்காங்கே தெற்கு முதல் மத்திய மற்றும் தென்மஹாராஷ்ட்ரா சயாத்திரியில், மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

பசுமைமாறாக்காடுகளின் விளிம்புகளிலும் மற்றும் அதிக மழை பெறும் இலையுதிர்காடுகளிலும் காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 800 மீ. வரையான மலைகளில் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

For. Fl. Burma 2: 237. 1877; Gamble, Fl. Madras 2: 994. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 334. 2004; Keshava Murthy and Yoganarasimhan, Fl. Coorg (Kodagu) 321. 1990. Cook, Fl. Bombay 2. 327. 1902.

Top of the Page