பின்னங்கா டிக்சோனை (Roxb.) Bl. - அரிக்கேசி

:

தமிழ் பெயர் : கானக காமுகு.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மெலிந்த ஒரகம் கொண்ட பனைவகை மரங்கள், 5 மீ. வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : தண்டில் இலை உதிர்ந்ததால் உண்டாகும் வட்டவடுக்களுடையது.
இலைகள் : சிறகுவடிவக்கூட்டிலைகள் (பின்னேட்), 1.5 மீ. நீளமானது; இலையுறை 30 செ.மீ. நீளமானது; சிற்றிலைகள் 50 X 3 செ.மீ., சிற்றிலையின் அலகு கோட்டு-ஈட்டி வடிவானது, எதிரடுக்கமாக அமைந்தவை, அலகின் நுனி ஒழுங்கற்ற பிளவுகளுடையது, உரோமங்களற்றது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி 35 செ.மீ. நீளமானது.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி, நீள்வட்ட வடிவானது; விதை முட்டை அல்லது நீள்வட்ட வடிவானது.

வாழியல்வு :

இருக்குமிடங்களில் அதிக எண்ணிக்கையில் காணப்படுபவை, பசுமைமாறாக்காடுகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுகின்றன - தெற்கு மற்றும் மத்திய சயாத்திரியில் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Blume, Rumph. 2: 85. 1838; Gamble, Fl. Madras 3: 1556. 1998 (re. ed); Cook, Fl. Bombay 1: 803. 1902; Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 507. 2004.

Top of the Page