பாலியால்தியா காபியாய்டஸ் (Thw.) J. Hk. & Thoms. - அனோனேசி

இணையான பெயர் : கட்டேரியா காபியாய்டஸ் Thw.

தமிழ் பெயர் : நக்குளை, நெடுநாரை

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

தண்டு மற்றும் மரப்பட்டை : மரங்கள் 20 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : தண்டு கழலைகளுடையது; மரத்தின் பட்டை வழுவழுப்பானது, உள்பட்டை க்ரீம் நிறமானது.
சாறு : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
மஞ்சரி / மலர்கள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, இருநெடுக்கு வரிசையிலையடுக்கம் (டைஸ்டிக்கஸ்); இலைக்காம்பு 0.6 செ.மீ. முதல் 1 செ.மீ. நீளமானது, தடித்தது; இலை அலகு 10-27 X 3.5-8.5 செ.மீ. ஈட்டி வடிவம், அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது, சிலவற்றில் சிறிது சமமற்றது, அலகின் விளிம்பு அலைப்போன்றது, மேற்பரப்பு பளபளப்பானது; இரண்டாம் நிலை நரம்புகள் 9-16 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் மெல்லியது, பெர்க்கரண்ட்.
கனி / விதை : மலர்கள் தனித்தனியானது அல்லது பக்கக்கிளைகளில் கொத்தாகவும் மற்றும் தண்டுக் கழலைகளிலும் மலர்கள் தோன்றும், மலர்கள் பச்சை கலந்த மஞ்சள் மற்றும் சிவப்பு கலந்தவை.

வாழியல்வு :

கொத்தான ஒரு விதையுள்ள முழுச்சதைகனி (பெர்ரி).

காணப்படும் இடம் :

மிதமான உயரமுடைய (சப்கேனோப்பி) மரமாக, உயரம் குறைந்த மலைகளிலுள்ள மற்றும் மிதமான உயரமுடைய மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளில் காணப்படும் (கடல் மட்டத்திலிருந்து 1200 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகிறது).

சான்று ஏடு :

Hooker, Fl. Brit. India 1: 62. 1872; Gamble, Fl. Madras 1: 16. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 19. 2004; Saldanha, Fl. Karnataka 1: 48. 1984; Keshava Murthy and Yoganarasimhan, Fl. Coorg (Kodagu) 33. 1990.

Top of the Page