(ப்)டேரிகோட்டா அல்லேட்டா (Roxb.) R. Brown - ஸ்டர்குலியேசி

இணையான பெயர் : ஸ்டர்குலியா அல்லேட்டா Roxb.

Vernacular names : தமிழ்ப் பெயர்: ஆனாதோண்டி.மலையாளப் பெயர்: ஆனாதோண்டி, காவலம், கொடத்தண்ணி, பூதோண்டி, பூலா.

English   Kannada   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பெரிய இலையுதிர் மரம், தாங்கு_வேர்களுடையவை (பட்ரஸ்டு), 30 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, நீள்வாக்கில் லெண்டிசெல் அமைந்தவை; உள்பட்டை மஞ்சள்-கீரிம் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் தடித்தவை, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, அடர்த்தியாக பொன்-ப்ரவுன் நிறமான நட்சத்திர வடிவ உரோமங்களுடையது, முதிரும் போது உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை, சிறுகிளைகளின் நுனியில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாக காணப்படும்; இலையடிச்செதில் பக்கவாட்டில் அமைந்தவை, எளிதில் உதிரக்கூடியது மற்றும் தழும்புகளை ஏற்படுத்துகின்றன; இலைக்காம்பு 5-10 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, காம்பின் நுனிப்பகுதி உப்பியது, உரோமங்களற்றது; இலை அலகு 10-20 (-30) X 7.6-14 (-20) செ.மீ., அகன்ற முட்டை வடிவானது அல்லது நீள்சதுர-முட்டை வடிவானது, அலகின் நுனி கூரியது அல்லது சிறிது அதிக்கூரியது, அலகின் தளம் இதய வடிவானது அல்லது சதுர வடிவானது, அலகின் விளிம்பு முழுமையானது அல்லது சிறிது அலை போன்றது, மெல்லிய கோரியேசியஸ், உரோமங்களற்றது; மையநரம்பு மேற்புறத்தில் அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; தளத்திலே 5_நரம்புகளை உடையது; இரண்டாம் நிலை நரம்புகள் 3-4 ஜோடிகள் நுனி நோக்கி வளைந்தவை, அலகின் பரப்பைவிட உயர்ந்து இருக்கும்; மூன்றாம் நிலை நரம்புகள் அகன்ற வலைப்பின்னல்-பெர்க்கரண்ட் போன்றவை.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி குட்டையானது இலைக்கோணங்களில் காணப்படுபவை பேனிக்கிள் வகை மஞ்சரி, முதிர்ந்த கிளைகளில் அமைந்தவை, துருப்போன்ற ப்ரவுன் நிறமான உரோமங்களுடையது; மலர்கள் பாலிகேமஸ்.
கனி / விதை : பாலிக்கிள் of 3-5, 12.5 X 9 செ.மீ., கோள வடிவமானது அல்லது முட்டை வடிவானது, தடித்தவை; விதைகள் 30, இறகுடையது.

வாழியல்வு :

எமர்ஜெண்ட் மரம் (காடுகளின் மேல்மட்ட அடுக்கை விட மிக உயர்ந்த மரமாக) முதல் மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக, திரிந்த பசுமைமாறாக்காடுகளின் விளிம்புகளில் காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 700 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

தெற்கு ஆசியா மற்றும் மீயான்மார்; மேற்கு_தொடர்ச்சி மலைகளில்-தெற்கு மற்றும் மத்திய சயாத்திரி பகுதிகளில் காணப்படுபவை.

சான்று ஏடு :

Bennett & Br., Pl. Jav. Rar. 234. 1844; Gamble, Fl. Madras 1: 104. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala-Flowering Plants, part 6: 59. 2004.

Top of the Page