செஃப்லீரா ரெசீமோசா Harms - ஆரல்லியேசி

இணையான பெயர் : ஹொப்ட்டலியுரம் ரெசீமோசம் Bedd.

தமிழ் பெயர் : எட்டிலைமரம், கண்ணீர்மரம்

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரம், 15 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, வழுவழுப்பானது; உள்பட்டை வெள்ளை நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் தடித்தது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வட்டம் போன்றது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் கைவடிவகூட்டிலைகள், மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை, நுனிக்கிளையில் இலைகள் கூட்டமாக மற்றும் நெருக்கமாகமைந்தவை; கூட்டிலையின் காம்பு பல்வினேட்; மத்திய முதற்காம்பு 8-25 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, கோடுகளுடையது, காம்பின் அலகின் தளம் அகன்று தண்டைச் சுற்றியவாறு காணப்படும், இலையடிச்செதில்கள் இலைக்காம்புடன் ஒட்டியவாறு காணப்படுபவை; சிற்றிலைக்காம்பு 1.3-6 செ.மீ. நீளமானது; ஒர் கூட்டிலையில் 5-9 சிற்றிலைகள் கொண்டவை, சிற்றிலையின் அலகு 5.5-17 X 3-6 செ.மீ. குறுகிய நீள்வட்டம் முதல் நீள்வட்ட-நீள்சதுர வடிவானது, அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் கூரியது முதல் வட்டமானது, அலகின் விளிம்பு அலைப்போன்றது, மெல்லிய கோரியேசியஸ், கீழ்பரப்பு உரோமங்களற்றது, அலகின் கீழ்பரப்பு மெழுகு பூசினாற் போல் உள்ளது; மையநரம்பு அலகின் பரப்பிற்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 7-9 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல்-பெர்க்கரண்ட் கொண்டது.
மஞ்சரி / மலர்கள் : தண்டின் பக்கவாட்டில் காணப்படும் பேனிக்கிள்டு ரெசீம்.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்); முட்டை வடிவானது, வரித்தழும்புகளுடையது; விதை தட்டையானது.

வாழியல்வு :

மேல்மட்ட அடுக்கு (கேனோப்பி) மரமாக, திரிந்த குட்டையான மரங்களுடைய பசுமைமாறாக்காடுகளில் காணப்படுகின்றன, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 900-2300 மீ. வரையான மலைகளில் காணப்படுபவை.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுபவை - ஏலமலை, தெற்கு சயாத்திரி மற்றும் நீலகிரியில் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Engler & Prantl, Naturl. Pflanzenfam.3 (8): 38. 1894; Gamble, Fl. Madras 1: 570. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 207. 2004.

Top of the Page