செமிகார்பஸ் காத்தலிகனான்சிஸ் Dassapa & Swaminath - அனகார்டியேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரம், 20 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை வழுவழுப்பானது, சாம்பல்-அரக்கு நிறம், பட்டையின் மேல் லெண்டிசெல் (பட்டை துளைகள்) பரவலாக காணப்படும், உள்பட்டை வெளிறிய அரக்கு நிறம்.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் தடித்தது, வழுவழுப்பானது, உரோமங்களற்றது.
சாறு : சாறு தண்ணீரை போன்றது, கொப்பளங்களை உருவாக்க கூடியது மெதுவாக கருப்பு நிறத்திற்கு மாறிவிடும்.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போன்று அமைந்தவை; இலைக்காம்பு 5-10 செ.மீ.; இலைகள் (25) 45-100 X (6) 15-22 செ.மீ, நீள்சதுர-ஈட்டி வடிவம் அல்லது தலைகீழ் முட்டை வடிவம், அலகின் நுனி சிறிது மழுங்கிய அதிக்கூரியது, அலகின் தளம் ஆப்பு வடிவம் மற்றும் சமச்சீரற்றது, அலகின் விளிம்பு முழுமையானது மற்றும் அலைப்போன்றது; இரண்டாம் நிலை நரம்புகள் பொதுவாக 20 ஜோடிகள்; மூன்றாம் நிலை நரம்புகள் வலைபின்னல் அமைப்பு கொண்டது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தண்டின் இலைக்கோணங்களில் காணப்படும் பேனிக்கிள் மற்றும் பச்சை நிறமுடையது; ஒர்பாலானவை மலர்கள், ஆண்மஞ்சரி 30-50 செ.மீ. நீளமானது; பெண்மஞ்சரி 5-15 செ.மீ. நீளமானது, சிறிய பொன் நிறமான அரக்கு உரோமங்களுடையது.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), தட்டையானது, சமச்சீரற்ற சிறுநீரக வடிவம், 2 செ.மீ., நீளமானது, ஒரு விதையுடன் காணப்படும்.

வாழியல்வு :

மரங்கள் அடர்த்தியற்ற பசுமைமாறாக்காடுகளில் உள்ள நீர் நிலைகள் சுற்றியுள்ள சதுப்பு நிலங்களில் காணப்படும்.

காணப்படும் இடம் :

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் (என்டமிக்) காணப்படுகிறது (இது வரைக்கும் காத்தலேகன், சிமோகா பகுதியில் உள்ள மத்திய சயாத்திரி பகுதியில் மட்டும் அறியப்பட்டுள்ளது).

சான்று ஏடு :

Indian For. 126: 78. 2000.

Top of the Page