சூரிகேடா அங்குஸ்டிஃபோலியா (Baill. ex Muell.-Arg.) Airy Shaw - ஈஃபோர்பியேசி

இணையான பெயர் : ஜெலோனியம் அங்குஸ்டிஃபோலியம் Baill. ex Muell.-Arg.; ஜெலோனியம் லான்சியோலேட்டம் sensu J. Hk.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மரங்கள், 6 மீ. உயரம் வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை சாம்பல் நிறமானது, வழுவழுப்பானது; உள்பட்டை கிரீம் நிறமானது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களற்றது.
இலைகள் : இலைகள் தனித்தவை, மாற்றுஅடுக்கமானவை, சுழல் போல் அமைந்தது; இலையடிச்செதில் எளிதில் உதிரக்கூடியது; இலைக்காம்பு 0.3-0.5 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பிளேனோகான்வக்ஸ், உரோமங்களற்றது; இலை அலகு 3.5-10.2 X 2-4 செ.மீ., தலைகீழ் முட்டை அல்லது தலைகீழ் ஈட்டி வடிவானது, அலகின் நுனி மொட்டையானது, அலகின் தளம் ஆப்பு வடிவானது, சிலசமயங்களில் சமமற்றது; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பிற்கு சமமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 6 ஜோடிகள், தெளிவற்றது; மூன்றாம் நிலை நரம்புகள் தெளிவற்றவை.
மஞ்சரி / மலர்கள் : மலர்கள் ஒர்பாலானவை, ஈரகம் கொண்டவை; ஆண்மலர்கள் சிறியவை, இலைக்கோணங்களில் தொகுப்பாகமைந்தவை; பெண்மலர்கள் தனித்தவை, இலைக்கோணங்களில் அமைந்தவை.
கனி / விதை : வெடிகனி (கேப்சூல்), வழுவழுப்பானது, 3 அறைகளுடையது, 0.6 செ.மீ. குறுக்களவுடையது; அறைக்கு ஓர் விதையுடையது.

வாழியல்வு :

கடலோரப்பகுதியிலுள்ள பசுமைமாறாக்காடுகளிலும் மற்றும் குறைந்தளவு மழை பெறும் பசுமைமாறாக்காடுகளிலும் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

தீபகற்ப இந்திய; மேற்கு தொடர்ச்சி மலைகளில் - மலபார் கடற்கரை பகுதி மற்றும் மழை குறைவாக பெறும் தெற்கு சயாத்திரி பகுதியிலும் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Kew Bull. 23: 128. 1969; Gamble, Fl. Madras 2: 1343. 1993 (re.ed.); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 429. 2004. 164.

Top of the Page