டெர்மினேல்லியா பேனிக்குலேட்டா Roth - காம்பிரிட்டோசி

:

தமிழ் பெயர் : ஆடா மருது, பேய்கடுக்காய், பேகரக்காய், பிள்ள மருது, பூல்வாய், பூ மருது, வெண்மருது, வேத மருது.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : மிக பெரிய மரங்கள் 20 மீ. உயரம் வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை ப்ரவுன் நிறமானது, பள்ளம் குறைந்த வெடிப்புகளுடையது; உள்பட்டை வெள்ளை நிறமானது, ப்ரவுன் நிறம் கலந்தது.
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறிய நுனிக்கிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையம் போன்றது, நுனிப்பகுதி துருப்போன்ற உரோமங்களுடையது.
இலைகள் : இலைகள் தனித்தவை, பெதுவாக எதிரடுக்கம் போன்றவை அல்லது, தண்டின் நுனியில் மாற்றுஅடுக்கமானவைகளாக காணப்படும்; இலைக்காம்பு 0.6-1.7 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையம் போன்றது, மிகச்சிறிய உரோமங்களுடையது அல்லது உரோமங்களற்றது; இலை அலகு 9-18 X 4.5-7 செ.மீ., நீள்சதுர அல்லது முட்டை-நீள்சதுர வடிவமானது, அலகின் நுனி அதிக்கூரியது, அலகின் தளம் வட்டமானது முதல் இதய (கார்டேட்) வடிவமானது, கோரியேசியஸ், அலகின் இருபுறத்திலும் சிறிது மென்மையான உரோமங்களுடையது, முதிரும் போது உரோமங்களற்றது, கோரியேசியஸ், உலரும் போது கருமை நிறமடைகிறது; மையநரம்பு அலகின் மேற்பரப்பில் லேசாக அலகின் பரப்பைவிட மேல் எழும்பியது; இரண்டாம் நிலை நரம்புகள் 10-15 ஜோடிகள், படிப்படியாக நன்கு வளைந்தது; மூன்றாம் நிலை நரம்புகள் வலைப்பின்னல்-பெர்க்கரண்ட்; இலைக்காம்பு அலகோடு இணையும் இடத்தில் ஒர் ஜோடி காம்பில்லா சுரப்பிகள் இலையின் பின்புறத்தில் காணப்படுகன்றன.
மஞ்சரி / மலர்கள் : பேனிக்கிள்டு ஸ்பைக் மஞ்சரி; மலர்கள் வெளிறிய/வெள்ளை நிறமானது.
கனி / விதை : சமாரா வகை (சிறகுடைய கனி), ப்ரவுன் கலந்த சிவப்பு நிறமுடையது, சிறகு சமமற்றது, நடுவிலுள்ள சிறகு பெரியது, ஓர் விதையுடையது.

வாழியல்வு :

பசுமைமாறாக்காடுகளின் விளிம்பு மற்றும் மரங்கள் அடர்த்தியற்ற பகுதிகளிலும், பகுதி பசுமைமாறாக்காடுகளிலும் காணப்படுபவை, குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 1200 மீ. உயரம் வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

தீபகற்ப இந்தியா; மேற்கு தொடர்ச்சி மலைகள் முழுவதும் காணப்படுகின்றன.

சான்று ஏடு :

Nov. Pl. Sp. 383. 1821; Gamble, Fl. Madras 1: 465. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 172. 2004; Cook, Fl. Bombay 1: 480. 1902; Saldanha, Fl. Karnataka 2: 51. 1996.

Top of the Page