வைபர்ணம் கோரியேசியம் Bl. - கேப்ரிபோலியேசி

இணையான பெயர் : வைபர்ணம் கேபிடுலேட்டம் Wt. & Arn.

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறு மரம் 8 மீ. உயரம் வரை வளரக்கூடியது
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கமானவை; இலையடிச்செதில் உதிரக்கூடியது; இலைக்காம்பு 2-3 செ.மீ. நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட்; இலை அலகு 5-13 X 2.5-4 செ.மீ., முட்டை வடிவம் - ஈட்டி வடிவம் கொண்டது; அலகின் நுனி நீண்ட அதிக்கூரி
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி கூட்டு அம்பல் மற்றும் கோரியம்ப், மலர்கள் பச்சை கலந்த வெண்நிறம், மகரந்த பை வைலட் நிறம்
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), நீள்வட்டம், உரோமங்களற்றது; ஒரு விதை கொண்டது, பருத்தது

வாழியல்வு :

கடல் மட்டத்திலிருந்து 1600 மீ. முதல் 1800 மீ. உயரம் கொண்ட பசுமைமாறாக்காடுகளின் விளிம்பில் காணப்படும்.

காணப்படும் இடம் :

இந்தியா, பூட்டான், மியான்மார் மற்றும் இந்தோனேசியா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் - அதிகமாக ஆனைமலை மற்றும் பழனி மலை மற்றும் கூர்க் (தலைகாவேரி) பகுதிகளில் காணப்படுகிறது.

சான்று ஏடு :

Blume, Bijdr. 656. 1826; Keshava Murthy and Yoganarasimhan, Fl. Coorg (Kodagu) 213. 1990; Gamble, Fl. Madras 1: 576. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 209. 2004.

Top of the Page