வைபர்ணம் ஏரப்சன்ஸ் Wall. ex DC - கேப்ரிபோலியேசி

:

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : சிறிய மரம் 8 மீ. உயரம் வரை வளரக்கூடியது
தண்டு மற்றும் மரப்பட்டை : மரத்தின் பட்டை லெண்டிசெல்லேட்லேட்; உள்பட்டை சிறிது சிகப்பு கலந்த ப்ரவுன் நிறம்
கிளைகள் & சிறிய நுனிக்கிளைகள் : சிறு நுனிகிளைகள் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் வளையமானது, உரோமங்களுடையது
இலைகள் : இலைகள் தனித்தவை, எதிரடுக்கமானவை, குறுக்குமறுக்கமானவை; இலையடிச்செதில் ஈட்டி வடிவம் கொண்டது, உதிரக்கூடியது; இலைக்காம்பு சிவப்பு நிறமானது, 3 செ.மீ. வரை நீளமானது, குறுக்குவெட்டுத் தோற்றத்தில் கேனாலிகுலேட்; இலை அலகு 12 X 8 செ.மீ., அகன்ற நீள்வட்டம் முதல் தலைகீழ் முட்டை வடிவம், அலகின் நுனி கூரியது- அதிக்கூரியது, அலகின் தளம் ஆப்பு வடிவம் முதல் வட்டமானது, அலகின் விளிம்பு ரம்ப பற்கள் முதல் விளிம்பு நோக்கிய பெரிய பற்களுடையது, எல்லா நரம்புகளும் மேற்பரப்பில் பள்ளமானது; மையநரம்பு மேற்பரப்பில் அலகின் பரப்பைவிட பள்ளமானது; இரண்டாம் நிலை நரம்புகள் 5-7 ஜோடிகள், கிட்டதட்ட எதிரானவை, மூன்றாம் நிலை நரம்புகள் பெர்க்கரண்ட்
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி தொங்கிய பேனிக்கிள்; மலர்கள் வெள்ளை நிறம்.
கனி / விதை : உள்ளோட்டுத்தசைகனி (ட்ரூப்), சிவப்பு நிறம், நீள்சதுரம் 1.5 X 0.8 செ.மீ. ஒரு விதை கொண்டது, நீள்சதுரம் 1 செ.மீ. ஆங்கில எழுத்து T-வடிவ நீள்வாக்கில் பள்ளமுடையது.

வாழியல்வு :

கடல் மட்டத்திலிருந்து 1800 மீ. முதல் 2200 மீ. உயரம் வரையான மலைகளிலுள்ள பசுமைமாறாக்காடுகளின் விளிம்பு பகுதியில் காணப்படும்.

காணப்படும் இடம் :

இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா; மேற்கு தொடர்ச்சி மலைகளில், ஆனைமலை, பழனி மற்றும் நீலகிரி பகுதியில் உள்ள பசுமைமாறாக்காடுகளில் காணப்படும்

சான்று ஏடு :

Candolle, Prodr. 4: 329. 1830; Gamble, Fl. Madras 1: 576. 1997 (re. ed); Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 209. 2004.

Top of the Page