கேரியோட்டா யூரன்ஸ் L. - அரிக்கேசி

இணையான பெயர் : கூந்தப்பனை, கூந்தல்பனை, இரும்பனை, திப்பிலிபனை

தமிழ் பெயர் : கொண்ட பனை, கூந்தல் பனை கூந்த பனை, இரும் பனை, திப்பிலி பனை

English   Kannada   Malayalam   Tamil   

மரங்களின் பண்புகள் வாழியல்வு காணப்படும் இடம் சான்று ஏடு

மரங்களின் பண்புகள் :

வளரியல்பு : பனைவகை மரங்கள் 15 மீ. வரை வளரக்கூடியது.
தண்டு மற்றும் மரப்பட்டை : தண்டு வழுவழுப்பானது மற்றும் இலை உதிர்ந்ததால் உண்டாகும் வட்டவடுக்களுடையது.
இலைகள் : இருமுறை கிளைத்த சிறகுவடிவக்கூட்டிலை (பைபின்னேட்), 5 மீ. நீளமானது; ஒர் கூட்டிலை 1.5 மீ. நீளமுடையது, 5-7 சிறகு ஜோடிகள் (பின்னா) கொண்டது, சிற்றிலையின் அலகு 25 X 10 செ.மீ., ஆப்பு வடிவானது, அலகின் நுனி ஒழுங்கற்ற பிளவுகளுடையது.
மஞ்சரி / மலர்கள் : மஞ்சரி பாளைகள் (ஸ்ஃபாடிக்ஸ் வகை), சிறிய காம்புடையது, நன்கு கிளைத்தது; ஸ்பேத் 3-5; ஸ்பைக்லட் நெருக்கமாக அமைந்தது; மலர்கள் ஒர்பாலனவை.
கனி / விதை : முழுச்சதைகனி (பெர்ரி), காம்புடையது, முட்டை அல்லது கோளவடிவானது; 1-2 விதைகளையுடையது, ரூமினேட்.

வாழியல்வு :

அதிகளவில் மரங்கள் அடர்த்தியற்ற பசுமைமாறாக்காடுகளில் கடல் மட்டத்திலிருந்து 1400 மீ. வரையான மலைகளில் காணப்படுகின்றன.

காணப்படும் இடம் :

இந்தோமலேசியா; மேற்கு தொடர்ச்சி மலைகளில் - தெற்கு, மத்திய மற்றும் தென்மஹாராஷ்ட்ரா சயாத்திரிகளில் காணப்படுகன்றன.

சான்று ஏடு :

Sp. Pl. 1189.1753; Gamble, Fl. Madras 3: 1560. 1998 (re. ed); Cook, Fl. Bombay 2: 805. 1902; Sasidharan, Biodiversity documentation for Kerala- Flowering Plants, part 6: 506. 2004.

Top of the Page